ஒரே மாதத்தில் 3 முறை சூரிய பெயர்ச்சி! எந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட் தெரியுமா?
சூரியனின் பெயர்ச்சியால் மூன்று ராசியினர் மட்டும் வரும் பிப்ரவரி மாதத்தில் அதிர்ஷ்டத்தினை பெற உள்ளனர்.
சூரிய பெயர்ச்சி
சூரிய கிரகமானது தனது ராசியினை 30 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொள்கின்றார். ராசியினை மட்டுமின்றி நட்சத்திரங்களையும் மாற்றிக் கொள்கின்றார்.
அவ்வாறு நட்சத்திரத்தின் மாற்றத்தின் போது அனைத்து ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆனால் மூன்று ராசியினர் மட்டும் நல்லதொரு பலனை அடைவார்கள்.

சூரியன் வரும் பிப்ரவரி மாதத்தில் 3முறை தனது நிலையை மாற்றிக் கொள்கின்றார். பிப்ரவரி 6ம் தேதி அவிட்டம் நட்சத்திரத்திற்குள் செல்லும் சூரியன், 13ம் தேதி மரக ராசியிலிருந்து வெளியேறி கும்ப ராசியில் நுழைகின்றார்.
பின்பு 19ம் தேதி சூரியன் மீண்டும் தனது நட்சத்திரத்தினை மாற்றி, சதயம் நட்சத்திற்கு பெயர்ச்சியடைகின்றார். ஆக மொத்தம் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 முறை பெயர்ச்சி அடையும் சூரியனால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்
சூரியனின் இந்த 3 பெயர்ச்சியினால் மேஷ ராசியினர் நேர்மறையான பலனை பெறுவதுடன், செய்யும் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.
வருமானம் அதிகரிப்பதுடன், எடுக்கும் வேலைகள் அனைத்தும் வெற்றியாகவே இருக்கும். இந்த பெயர்ச்சியால் நிதி ரீதியான முன்னேற்றத்தை அடைவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டம் கிடைக்குமாம். வரன் தேடுபவர்களுக்கு திருமணம் கைகூடிவரும் நிலையில், வருமானத்தில் முன்னேற்றம், வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
மேலும் புதுமனை, வீடு போன்ற சொத்துக்கள் வாங்கும் நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.

தனுசு
பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் இந்த மூன்று பெயர்ச்சியினால் தனுசு ராசியினர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ உள்ளது. தொழில், வணிகம் இவற்றில் லாபம் கிடைக்கும்.
வெளிநாட்டிற்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன், நீண்ட காலமாக தடைபட்டுள்ள வேலைகள் இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக முடிவடையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |