என் அப்பா இறப்பை கைத்தட்டி கொண்டாடிய அவலம்.. நடிகர் பிரித்திவிராஜ் உருக்கம்
அப்பாவின் மரணத்தின் போது நடந்த அவலம் பற்றிய நடிகர் பிரித்திவிராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் பிரித்திவிராஜ்
தமிழ், மலையாளம் என பலமொழிகளிலும் பிஸியான நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் நடிகர் பிரித்விராஜ்.
இவர், குடும்பத்தில் உள்ள அனைவரும் திரை உலகை சார்ந்தவர்கள் என்பதால் மலையாளத்தில் பெரிய வரவேற்பு இருந்தது.
பிரித்திவிராஜ் மலையாளத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன் பின்னர், கடந்த 2006ம் ஆண்டு மலையாளத்தில் கிளாஸ் மெட்ஸ் என்ற படத்தில் அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது.
சாவு வீட்டில் நடந்த அவலம்
இந்த நிலையில், பிரித்திவிராஜ் பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பா இறந்த போது நடந்த சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது,“ என்னைப் பொறுத்தவரை பிரபலங்கள் மறைந்த பின்னர் அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனுமதிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இதன்படி, என்னுடைய அப்பா இறந்த போது மலையாள சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.
அப்போது என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் மிகந்த மனம் வருத்தத்தில் இருந்தனர். அந்த சமயம் மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்கள் வரும் பொழுது கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் அவர்கள் என்னுடைய குடும்பத்தினரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டார்கள்...” என பேசினார்.
பிரித்விராஜின் தந்தை சுகுமாரன், கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
