இட்லி, தோசைக்கு முள்ளங்கி சட்னி செய்துருக்கீங்களா? சுவை தாறுமாறாக இருக்குமாம்
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்களில் ஒன்றான முள்ளங்கியை வைத்து சடனி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இட்லி தோசை என்று நாம் எடுத்துக் கொண்டால், அதற்கு சைடிஷாக சட்னி, சாம்பார் இவற்றினை வைத்து சாப்பிடுவார்கள்.
அதிலும் சட்னியில் அதிகமான வகைகளை வைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது முள்ளங்கியில் சட்னி செய்வதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 300கிராம்
இஞ்சி - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
மல்லி விதை - அரை கப்
வர மிளகாய் - 10
சீரகம் - 1 ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முள்ளங்கியை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதனுடன் முள்ளங்கியை சேர்த்து 15 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு வெங்காயம், இஞ்சி, மஞ்சள் சேர்த்து ஒரு 4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு இதனுடன் புளி சேர்த்து நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, வர மிளகாய், கொத்தமல்லி விதைகள், சீரகம் மற்றும் சிறிது மஞ்சள் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
மிக்ஸி ஜாரில் இவற்றினை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும், பின்பு வதக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை இதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக சிறிதளவு எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்தால் சுவையான முள்ளங்கி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
