இளம் நடிகையை மேடையில் வர்ணித்த தனுஷ்! யார் அந்த நடிகைன்னு தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தனுஷ். அவர் நடிகர், இயக்குநர், பாடகர், எழுத்தாளர் என பன்முக திறமைக்கொண்டவராக அறியப்படுகின்றார்.
தற்போது ஹிந்தியிலும் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். படப்பிடிப்பில் எவ்வளலு பிஸியாக இருந்தாலும், தனக்கு நெருக்கமானவர்களின் அழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில், மற்ற படங்களில் விழாக்களிலும் கலந்துகொள்கிறார்.

அந்தவகையில், நேற்றைய தினம் நடிகர் கருணாஸ் மற்றும் சின்னத்திரை பிரபலமாக திகழும் கிரேஸ் தம்பதியினரின் மகன் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் படவிழாவில் தனுஷ் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் தனுஷ் மேடையில் பேசுகையில், படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது என்று அசுரன் படத்தில் நான் சொன்னதற்கு அதை தவிர கென் எல்லாமே பண்ணிருக்க.

படத்தின் முதல் ஃபோஸ்டரிலே மூன்று பெண்கள் உடன் பைக்கில் உட்கார்ந்திருக்கிறான் என கென் குறித்து கலகலப்பாக சில விடயங்களை பகிர்ந்தார்.
மேலும், நான் சினிமாவில் அறிமுகமாகும் போது எல்லாம் நம்முடைய சீனியர்ஸை பார்த்து கத்துக்கனும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் அப்படி எல்லாம் காத்திருப்பதில்லை அடுத்து ஏதையாவது செய்து மேலே வந்துவிடுகிறார்கள் கென்னிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றது என பெருமையாக பேசியிருந்தார்.

ஹீரோயின் குறித்து தனுஷ்
அதனை தொடர்ந்து, ஹீரோயின் பற்றி பேசுகையில், சிறை படத்தில் நடித்திருந்த நடிகை. உங்க smileக்கு நான் பெரிய fan. உங்களுக்கு அழகிய, அப்பாவித்தனமான, ஒரு சிறப்பு இயல்பாகவே இருக்கிறது. அது உங்களின் முந்தைய படத்திற்க்கு பெரிதும் உதவியுள்ளது. சிறை படத்தில் நன்றாக நடித்து இருந்தீர்கள் என தனுஷ் மேடையில் பேசி இருக்கிறார்.
யூத் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக அனிஷ்மா அணில்குமார் நடித்துள்ளார். இவர் சிறை படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களின் அமோக வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.