யார் கையை அறுத்தது என்பதை நிரூபிப்பேன்! ரவி மோகனுக்கு மாமியார் நெத்தியடி பதில்
ஆர்த்தி கையை அறுத்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதால் தான் திருமணம் செய்ததாக இன்று செய்தியாளர் சந்திப்பில் ரவி மோகன் குறிப்பிட்டதற்கு, யார் கையை அறுத்து திருமணம் செய்தது என்பதை நிரூபிப்பேன் என ரவிமோகனின் மாமியாரும் ஆர்த்தியின் தாயுமான சுஜாதா தெரிவித்துள்ளார்.
ஆர்த்தி, அவரது குடும்பம் குறித்து காலை ரவிமோகன் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்த நிலையில் தற்போது சுஜாதா அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்த்தி அம்மா பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா, ரவிமோகனின் அவதூறுகளுக்கு பதில் அளிக்கப்படும். யார் கையை அறுத்து திருமணம் செய்தது என்பதை நிரூபிப்பேன்.
வேஷம் போட்டு ரவி மோகன் பேட்டி கொடுத்துள்ளார். இந்த 2 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ரவிமோகன் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு வங்கிக் கணக்கு என்னோடது, உன்னோடது என்றெல்லாம் இல்லை. எல்லாம் ஒரே அக்கவுண்ட்தான். எனக்கு மருத்துவ செலவுக்கு ரூ 25 ஆயிரம் மாதாமாதம் கொடுத்ததாக சொல்கிறார், அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை நடந்திருந்தாலும் அது இவரின் கடமை தானே.
அவர் கொடுத்ததாக சொல்வதால் என் மகன் கொடுத்தது போல் நான் மகிழ்கிறேன். ரவி மோகன் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது.

நாங்கள் ஒரு போதும் அவரை மரியாதை குறைவாக பேச மாட்டோம். ஆர்த்திக்கு ஆதரவாக அவர்கள் குறிப்பிட்ட நடிகைகள் மட்டும் இல்லை, எண்ணற்ற மக்கள் ஆதரவாக கமென்ட் போட்டுள்ளார்கள். அதை அவர் பார்க்க வேண்டும்.
இதற்கு மேல் இந்த விவகாரத்தில் பேசினால் நீதிமன்ற அவதூறு ஆகிவிடும். எனது உறவினரை ரவி அழைத்து வைத்து பேட்டி கொடுத்திருந்தார். அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை.

அவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ரவி அவரது குழந்தைகளுக்காக வாழ்கிறார் என்றால் எனது மகள்களுக்காக நான் வாழ்கிறேன்.
எல்லாரும் அப்படித்தான் என சுஜாதா தெரிவித்தார். குறித்த விடயம் தற்போது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் தரப்பில் உண்மை இருக்கின்றது என்பதை நீதிமன்ற விசாரணை தான் வெளிக்கொண்டுவர வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |