மறதிக்கு பெயர் பெற்ற டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை விடே ஆளுமை ஆகியவற்றில் ஆதிகம் செலுத்துவதை போல், அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எல்லாவற்றையும் எளிதில் மறந்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி முக்கியமான விடயங்களை சொன்னால் கூட காதில் வாங்கிய உடனேயே மறந்துவிடும் அளவுக்கு மறதிக்கு பெயர் பெற்ற ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு

தனுசு ராசியினர் சாகச குணத்துக்கும் சுதந்திர இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விடயத்தையும் பெரிதாக போட்டு குழப்பிக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
தங்களின் சந்தோஷத்துக்கும், சுதந்திரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் தங்களின் வழ்க்கையில் நடக்கும் கவலையாக விடயங்களை எளிதில் மறந்துவிட்டு அதனை கடந்து செல்லும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த மறதி குணம் முக்கியமான விடயங்களையும் மறந்துவிட்டு பின்னர் அதனால் பிரச்சினையை அனுபவிக்க காரணமாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு மாத்திரமல்ல அவர்களின் மறதிக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
தங்களின் தனிப்பட்ட விடயங்கள் குறித்து எப்போதும் ரகசியம் காக்க விரும்பும் இவர்கள் எளிதில் யாரிடடும் நெருங்கி பழக மாட்டார்பகள்.
இவர்களிடம் ஒரு விடயத்தை சொல்லிவிட்டு அது பற்றி சிறிது நேரத்தில் கேட்டால் அதை தங்களிடம் சொல்லவே இல்லை என்னும் அளவுக்கு முற்றிலும் மறக்கும் தன்மை இவர்களிடம் இருக்கும்.
மீனம்

மீன ராசியினர் தங்களின் கற்பனை திறனுக்கும் கனவு காணும் குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் வாழ்கையில் பாதி காலத்தை கனவு காணுவதிலேயே வாழ்ந்துவிடுவார்கள். இவர்களிடம் சொல்லப்படும் விடயங்களையும் கூட கனவில் சொல்லப்படுவதாகவே எண்ணி பெரும்பாலான நேரங்களில் மறந்துவிடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |