திருமணத்திற்கு முன்னரே பெட்ரூமில் இருந்து புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
நடிகை பாவனி திருமணத்திற்கு முன்னர் அமிருடன் பெட்ரூமில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
சினிமா வாழ்க்கை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய “ரெட்டை வால் குருவி” மற்றும் “தவணை முறை வாழ்க்கை” போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகை பாவனி.
இதனை தொடர்ந்து இவர் “சின்ன தம்பி” என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் பாவனிக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலை விட்டு விலகினார்.
அப்போது பாவனி, பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பின்னர் சில காரணங்களால் கணவர் தற்கொலை செய்துக் கொண்டார்.
கணவர் தற்கொலை பார்த்த பாவனி மீடியாத்துறையிலிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் “பிக் பாஸ் சீசன் 5”க்கு முக்கிய போட்டியாளராக மீண்டும் மீடியாவிற்குள் நுழைந்தார்.
பெட்ரூமில் இருக்கும் அமிர் - பாவனி
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது சக போட்டியாளராக கலந்து கொண்ட அமிரை காதலித்தார்.
இவரின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த பாவனி திடீரென டிவி நிகழ்ச்சியில் அமிரின் காதலை ஏற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து இருவரும் அவர்களின் சமூக வலைத்தளங்களிலும் கெரியரிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில், பெட்ரூமில் இருக்கும் புகைப்படங்களை பாவனி தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள்,“ திருமணத்திற்கு முன்னரே ஒரே பெட்ரூமில் இருக்கீங்களா?” என கழுவி ஊற்றியுள்ளார்கள்.