வெளியே வந்ததுமே பிக்பாஸ் பாவனிக்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்;
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம், மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் பாவனி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும், பிக்பாஸ் அல்டிமேட் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும், போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வரும் நிலையில், பாவனி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.
அதில், “என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும்... நான் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் நான் அனைத்து மருத்துவ நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்” லவ் பாவனி என குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவை கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.