ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணம் அதிகமாமே
ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்தக் குறிப்பில் ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் பலன் பற்றிப் பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்களிடம் பேசுவற்கு முன்பு நன்றாக யோசித்த பின்பே பேச வேண்டும். இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள்.
அதேநேரம் இவர்கள் எளிதாக எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏதெனும் பிரச்சினை ஏற்படப் போகின்றது என்று தெரிந்தாலே இவர்கள் நழுவி விடுவார்களாம்.
தங்களின் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். இருப்பினும் அதனை பெரிதாக வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களிடம் கற்பனைத் திறன் சற்று அதிகமாகக் காணப்படும்.
அதுமட்டுமில்லாமல் தாய்நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் மிகுந்த நாட்டம் கொண்டிருப்பார்கள். எப்போதுமே எதையாவதொன்றை யோசித்துக்கொண்டே இருப்பார்கள். இடம்,பொருள் அறிந்து நடந்து கொள்வார்கள்.
யாரேனும் இவர்களை பகைத்துக் கொண்டால், நேரடியாக பதிலளிக்க மாட்டார்கள். பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். நல்ல ஞாபக சக்தி இவர்களிடம் இருக்கும்.
யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் விரைவாக நட்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதேசமயம் அவர்களால் ஏதும் பிரச்சினை ஏற்படும் பொழுது விரக்தியின் உச்சத்துக்கே சென்று விடுவார்கள்.
சில சொந்தங்களுடன் இவர்களுக்கு ஒத்துப்போகாது. அக்கம்பக்கத்தினர், நண்பர்களின் மூலம் இவர்களுக்கு பிரச்சினைகள் வரும் வாய்ப்பு குறைவு. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் தீவிரமாக இறங்கினால், அதில் எளிதாக வெற்றி பெறுவார்கள்.
எந்தவொரு விடயமாக இருந்தாலும் சரி அதனை எளிதில் புரிந்துகொள்வார்கள். அடிக்கடி தங்கள் முடிவுகளையும் குணத்தையும் மாற்றுவார்கள்.
இவர்களின் பிடிவாத குணத்தால் சொந்தபந்தங்கள், நண்பர்களிடையே மனக்கசப்புக்கள் ஏற்படும். தங்களுக்கு இலாபம் ஏற்படுமாயின் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள்.