பிரபல இயக்குனரின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா? கேட்டா வாயடைச்சு போயிடுவீங்க
Rinosharai
Report this article
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
மணிரத்னம்
80களில் ஆரம்பித்து இன்று வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம்.
ஒரு பெண்ணின் காதலையோ அல்லது ஒரு ஆணின் காதலையோ இவர் அளவிற்கு வெளிப்படுத்திவிட முடியாது.
அப்படி ஒரு கற்பனைத் திறன் கொண்டவர். நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாய், ராவணன், இருவர், ஓ காதல் கண்மணி, செக்கச் சிவந்த வானம் என இன்னும் பல சூப்பர் படங்களை கொடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவிற்கு.
மேலும், இவரின் பலநாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் நாவலை தன் திரையில் காட்ட வேண்டும் என்று நினைத்து அதிலும் வெற்றிக் கண்டார்.
இவரின் முயற்சியால் பொன்னியின் செல்வன் பாகம் 1மற்றும் 2 இரண்டு பாகமாக கொடுத்து வசூலையும் அள்ளிக் குவித்தார்.
சொத்து விபரம்
இந்நிலையில், மணிரத்தினம் இன்று தன் 67ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்ற நிலையில், அவரின் சொத்து விபரம் பற்றிய செய்தி வைரலாகி வருகின்றது.
இத்தனை வருட திரைப்பயணத்தில் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்றுப் பார்த்தால்கிட்டத்தட்ட 140 கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருக்கிறாராம்.
ஒரு படத்திற்கு மாத்திரம் இவர் 22 கோடி சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.