கொடிய விஷம் கொண்ட பாம்புகளையே ஆடையாக்கிய பெண்! மெய்சிலிர்க்கும் காணொளி
கொடிய விஷம் கொண்ட பாம்புகளையே ஆடையாக அணிந்திருக்கும் பெண் ஒருவரின் மெய் சிலிர்க்க வைக்கும் காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என்பார்கள். காரணம் உலகில் எத்தனையோ வேட்டை விலங்குகள் மற்றும் விஷ பூச்சுகள் இருந்தாலும் தொன்று தொட்டு பாம்புகள் மீது மனிதர்களுக்கு இருக்கும் பயம் அளப்பரியது.

ஆனால் மனிதர்களுக்கு பாம்புகள் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு பாம்புகள் மீதான ஆர்வமும் இருக்கத்தான செய்கின்றது.
அதன் விளைவாகவே நாள்தோறும் ஏராளமாக பாம்புகள் சம்பந்தப்பட்ட காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்தவகையில், தற்போது கொடிய விஷம் கொண்ட பாம்புகளையே ஆடையாக அணிந்திருக்கும் பெண் ஒருவரின் காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
குறித்த காணொளி AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக இருப்பினும், பார்ப்பதற்கு தத்ரூபமாக நிஜ பாம்புகளை போலவே இருப்பதால், இக்காணொளி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |