வாழ்க்கையில் இந்த 4 விடயங்களை பாதியில் விட்டால் ஆபத்து உறுதி! எச்சரிக்கும் கருட புராணம்
பொதுவாகவே அனைத்து மதங்களும் இறப்புக்கு பின்னர் சொர்க்கம் மற்றும் நரகம் இருப்பதாகவும் இந்தவுலகில் செய்யும் பாவங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தான் வெவ்வேறு வழிகளில் வழியுறுத்துகின்றன.
அந்த வகையில் இந்து சாஸ்திரங்களில் முக்கிய இடம் வகிக்கும் கருட புராணத்தில் இறப்பு பற்றியும், பாவங்களுக்கான தண்டனைகள் குறித்தும் விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வாழ்வில் எந்த விடயங்களை செய்ய வேண்டும், செய்யவே கூடாது என்பது பற்றியும் இதில் தெளிவாக விளக்கப்படுட்டுள்ளது.
எனவே கருட புராணத்தில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம், வாழ்க்கையில் பெரிய இழப்புகளை தவிர்க்க, எப்போதும் மிச்சம் வைக்கவே கூடாத விடயங்கள் குறித்தும் அதற்கான காரணம் பற்றியும் விரிவாக இந்த பதிவின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.

பாதியில் விட கூடாத விடயங்கள்
கருட புராணத்தின் பிரகாரம், யாரிடமாவது கடன் பெற்றால் அதை மிகுந்த பொறுப்புணர்வுடன் திருப்பி செலுத்த வேண்டியது முக்கியம். கடன் பெற்றுவிட்டு அதை திருப்பி செலுதாது மிச்சம் வைத்துவிடுவது மிகப்பெரும் பாவமாக கருதப்படுகின்றது. இது பல ஜென்மங்களுக்கு தொடரும் கருமவினையாக மாறிவிடும் என கருட புராணம் எச்சரிக்கின்றது.

கருட புராணத்தில் நோய் பற்றி பேசப்பட்டுள்ளது. எந்த நோயாக இருந்தாலும் அதை குணப்படுத்தும் முயற்சியில் இறுதிவரையில் முயற்ச்சிக்க வேண்டும். ஒரு நோயிக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதை பாதியில் நிறுத்துவது பெரும் பாதக விளைலை ஏற்படுத்தும். எனவே சிகிச்சைகளை ஒருபோதும் பாதியில் விடவே கூடாது.
கருட புராணத்தில் குறிப்பிடப்படுவதன் பிரகாரம் ஒரு தீப்பொறி போதும் ஒரு காடே எரிந்து சாம்பல் ஆவதற்கு எனவே நெருப்பில் ஒரு போதும் மிச்சம் வைக்க கூடாது. முழுமையாக அணைத்துட வேண்டும் இல்லாத போது, அது எதிர்ப்பார்க்காத தருணத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்த கூடும்.
அதை போல் தான் வாழ்க்கையிலும் வரும் வதந்திகளையும் முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும். நெருப்பை போல் பரவவிடக்கூடாது என்பதையே கருட புராணம் அதன் மூலம் குறிப்பிடுகின்றது.
குறிப்பாக எதிரியுடனான பகைமையை நிறுத்த முடிவு செய்யதால், எதிரிகளை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். தீயில் மிச்சம் வைப்பதும் பகையில் மிச்சம் வைப்பதும் எப்போதும் ஆபத்தானது என கருட புராணம் எச்சரிக்கின்றது. இந்த விடயத்தை திருக்குறளும் வலியுருத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |