Costliest Visa: UK or US இல்லையாம்! உலகில் மிகவும் காஸ்ட்லியான விசா எந்த நாட்டுடையது?
பொதுவாக ஒரு நாட்டின் பிரஜை இன்னொரு நாட்டில் சென்று தங்க வேண்டும் என்றால், விசா பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். விசா என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அனுமதி.
வெளிநாட்டு நபரொருவர் குறிப்பிட்ட நோக்கத்திற்காக (சுற்றுலா, வேலை, படிப்பு போன்றவை) குறித்த நாட்டின் எல்லைக்குள் உற்பிரவேசிப்பதற்கும் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கியிருப்பதற்கும் விசா பெற வேண்டியது இன்றியமையாதது.

விசா பொதுவாக நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்து, உங்கள் பாஸ்போர்ட்டில் முத்திரையாகவோ அல்லது ஒரு தனி ஆவணமாகவோ வழங்கப்படும். குறிப்பிட்ட சில நாடுகளின் விசா கட்டணமானது அந்த நாட்டிற்கு செல்லும் பயணச் செலவை விட அதிகமாக இருக்கலாம்.

அந்தவகையில், உலகில் மிகவும் காஸ்ட்லியான விசா எந்த நாட்டுடையது என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? இந்த கேள்வியை கேட்டால், பெரும்பாலானவர்களின் பதில், அமெரிக்கா,அவுஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து என்பதாக இருக்கும். ஆனால் அவை கிடையாது.
எந்த நாட்டுடையது?
உலகின் மிக விலையுயர்ந்த சுற்றுலா விசா வைத்திருக்கும் நாடாக பூடான் குறிப்பிடப்படுகின்றது. ஒரு பயணி ஐந்து நாட்கள் பூட்டானில் தங்கினால், ஹோட்டல் மற்றும் விமானச் செலவுகளைத் தவிர்த்து, அரசாங்கக் கட்டணமாக மட்டுமே 500 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக அதாவது சுமார் 47 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

பூடான், அதன் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க "அதிக மதிப்பு, குறைந்த அளவு" (High Value, Low Volume) என்ற சுற்றுலா கொள்கையைப் பின்பற்றி வருகின்றது.
இதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளுக்குப் பதிலாக, அதன் அமைதி, இயற்கை மற்றும் ஆன்மீக மதிப்பை உண்மையாக உணர்ந்து பாராட்டக்கூடிய பயணிகளை மட்டுமே அந்நாடு ஏற்க விரும்புகின்றது.

இதில் இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சில விதி விலக்கு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |