இந்த மாநிலத்தில் மட்டும் நாய்கள், பாம்புகள் கிடையாது- பின்னணி காரணம் என்ன?
இந்தியாவில் இருக்கும் லட்சத்தீவு எனும் சுற்றுலா தலத்தில் நாய்கள் மற்றும் பாம்புகளுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகின்றது. இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம்.
நாய்கள் மற்றும் பாம்புகள் இல்லாத மாநிலம்
இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம் தான் லட்சத்தீவு. கண்கவர் பவளப்பாறைகள், அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் தெளிவான கடல் நீர் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
இங்கே பல இடத்திலிருந்தும் மக்கள் தங்கள் நண்பர்கள் குடும்பத்துடன் வந்து நேரங்களிப்பார்கள்.
இந்தியாவில் இந்த மாநிலத்தில் மட்டும் தான் பாம்புகள் இல்லையாம். இங்கே பாம்புகளுக்கு கடுமையான தடை உள்ளது. இந்த லட்சத்தீவில் ஒரு இடத்தில் கூட பாம்புகளை பார்க்க முடியாது.
இது தவிர உலகில் இருக்கும் அனைவரும் விரும்பும் செல்லப்பிராணி தான் நாய். ஆனால் லட்சத்தீவில் நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கே வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவிதமான வெறிநாய்க்கடியோ அல்லது விஷக்கடியோ வரக்கூடாது என்பது தான்.
இது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். இங்கே வெறும் 100க்கும் குறைவான மக்கள் தொகையே காணப்படுகின்றது.
மிச்சம் உள்ள மற்றைய பகுதிகள் இங்கே மக்கள் வசிக்காமல் சுற்றுலா பயணிகளுக்காக விடப்பட்டுள்ளது.
இங்கே இயற்கை அழகு மற்றும் சாகச விளையாட்டுகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கின்றன. மாசுபடாத கடல்கள், பவளப்பாறைகள் மற்றும் கடலின் தெளிவு அனேக மக்களை இங்கு ஈர்க்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
