90 நாட்களில் கொழுப்பு கல்லீரலை எப்படி இல்லாமல் செய்யலாம்?
கல்லீரல் அதிகப்படியான கொழுப்பைக் குவிக்கும் போது இந்த கொழுப்பு கல்லீரல் நோய் உண்டாகும். கல்லீரல் உங்கள் உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு ஆகும்.
நமது உடலின் இரத்தத்தில் இருந்து ஆபத்தான நச்சுகளை வடிகட்டுவதற்கும், செயலாக்கத்தில் உதவுவதற்கும் இது பயன்படும். உணவு மற்றும் பானங்களிலிருந்து நச்சுக்களை வடிகட்டி அனுப்புவதை இந்த கல்லீரல் ஒரு வேலையாக பார்த்து வருகின்றது.
அதிகப்படியான கொழுப்பு கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்கும். கொழுப்பு கல்லீரலால் கடுமையான கல்லீரல் அழற்சி கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிரோசிஸ் போன்ற பல்வேறு நோய்கள் வரலாம்.
எனவே இந்த கொழுப்பு கல்லீரைலை மாற்ற சரிசெய்ய 90 நாட்கள் இருந்தால் போதும் இதை பதிவில் பார்க்கலாம்.
கொழுப்பு கல்லீரலை மாற்றும் 90 நாட்கள்
சக்கரை - அதிகமான சக்கரை உடல் எடையை அதிகரிக்கும். இந்த சக்கரையில் இருக்கும் பிரக்டோஸ், கல்லீரலில் நேரடியாக கொழுப்பாக சேமிக்கிறது.
நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் பாக்கெட் பழச்சாறுகள், சுவையூட்டப்பட்ட தயிர், எனர்ஜி பார்கள் மற்றும் "ஆரோக்கியமான" சிரப்களில் அதிகப்படியான சக்கரை இருக்கிறது. இது அமைதியாக கொழுப்பு கல்லீரல் நோயை கொண்டு வரும். எனவே இந்த பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள்.
நார்ச்சத்து உணவுகள் - நார்ச்சத்து நம் உடலின் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகின்றது.
இது தவிர வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது, இவை அனைத்தும் கொழுப்பு கல்லீரலை மாற்றுவதற்கு வழிவகுக்கும்.
ஒமேகா-3 - கொழுப்பு கல்லீரல் வந்து விட்டது என்பதற்காக எல்லா கொழுப்புக்களையும் தவிர்க்க கூடாது. ஒமேகா-3 கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை.
இதனால் இவை கல்லீரலில் கொழுப்பு சேருவதைக் குறைக்கும். எனவே நமது உடல் ஒமேகா 3 எடுத்துக்கொள்ள கொழுப்பு நிறைந்த மீன், ஆளி விதை எண்ணெய் மற்றும் வால்நட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
போதுமான தூக்கம் - தூக்கமின்மை கல்லீரலின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்க வழிவகுக்கும், இது கொழுப்பு கல்லீரல் நோயை மேலும் மோசமாக்கும். எனவே ஒரு நாளைய்க்கு முடிந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
இரவில் தாமதமாக சாப்பிடுவது - இரவில் தாமதமாக சாப்பிட்டால் அது நம் எடையை அதிகரிக்க செய்யும். நாம் இரவில் சரியான நேரத்தில் சாப்பிடும் போது அது மிக வேகமாக ஜீரணிக்கிறது.
ஜீரணித்து முடிந்து கல்லீரல் வேலையில்லாமல் இருக்கும் போது தன்னை தானே சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். ஆனால் இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டால் தன்னை தானே சரிசெய்யும் யுத்திக்கு தடையாக அமையும்.
எனவே நேரத்திற்கு எல்லாம் செய்து கொண்டால் கலோரிகளை பதப்படுத்துவதற்குப் பதிலாக சேமிக்கப்பட்ட கொழுப்பை எரிப்பதில் கல்லீரல் செயற்படும். இந்த பழக்கங்களை தொடர்ந்து 90 நாட்கள் கடைபிடித்தால் கல்லீரல் கொழுப்பு சிறுது சிறுதாக குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
