மது அருந்தியவர்கள் இனி சிக்கவே மாட்டார்கள்... நறுமணம் வீசும் மதுபானங்கள் அறிமுகம்!
பொதுவாகவே மது அருந்தும் பழக்கம் உடல் உள ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அதனை முற்றிலும் தவிர்ப்பது பெரும் சவாலான விடயமாகவே உள்ளது.
இந்நிலையில், மது பழக்கம் கொண்டவர்களின் ஒற்றைப்பிரச்சினைக்கும் தீர்வு வந்துவிட்டது. மது பழக்கம் கொண்டவர்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளும் பிரச்சனை, என்னவென்றால் இது நிச்சயம் மதுவின் மணமாகத்தான் இருக்கும்.
சிலரால் அதனை சகித்துக்கொள்ளவே முடியாத போதும் கூட மது அருந்துவதை விடவே மாட்டார்கள். மதுவின் மணம் காரணமாக, மது அருந்துபவர்கள் பல சமயங்களில் போலீஸ் மற்றும் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக, இனிமேல் மது அருந்தும்போது, பூக்கள் மற்றும் பழங்களின் வாசனையை உணரும் புதிய வகை மதுபானங்கள் சந்தைக்கு அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய மதுபானங்களின் சிறப்பம்சங்கள்
இயற்கை நறுமணம்: இந்த வகை மதுபானங்கள், பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படுவதன் காரணமாக மதுவின் சாதாரண வாசனையில் இல்லாமல், அவற்றின் இயற்கையான நறுமணத்தைத் கொடுக்கின்றது. அதனால் மதுவின் வாசனையால் இனி முகம் சுழிக்க வேண்டியதில்லை.
பல்வேறு வகைகள்: மல்லிகை, லாவெண்டர், ரோஜா போன்ற பூக்களிலிருந்து ஜின், மாம்பழம், அன்னாசி, பலாப்பழம் போன்ற பழங்களிலிருந்து மதுபானம், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளிலிருந்து வோட்கா எனப் பல வகைகள் அறிமுகமாகவுள்ளது. அது மதுபான வர்த்தக்கத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தலாம்.
உலகளாவிய வரவேற்பு: இங்கிலாந்து, ஜப்பான், ஸ்காட்லாந்து, இத்தாலி, அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் இந்த வகை மதுபானங்கள் ஏற்கனவே பிரபலமாக காணப்படுகின்ற நிலையில், இனிஅனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த புதிய முயற்சி, மது அருந்துபவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருவதோடு, சமூகத்தில் மதுவின் தகாத மணத்தால், ஏற்படும் சில அசௌகரியங்களையும் தவிர்க்க உதவும் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
வாசனையில் மாற்றம் வந்தாலும் மது அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கும் மோசமான விளைவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |