சாப்பாட்டுக்கு பின் டீ, காபி குடிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி!
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு டீ, காபி இன்றி ஒரு நாளை கூட கடந்த முடியாது என்றால் மிகையாகாது.
இன்னும் சிலருக்கு சாப்பாட்டுக்கு பின்னர் நிச்சயம் ஒரு காபி, அல்லது டீ குடித்தே ஆக வேண்டும். இவ்வாறு சாப்பிட்ட பின்னர் டீ, காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பானதா?எவ்வாறாக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
உண்மையில் ஒரு டீ, காபி பிரியருக்கு, உலகில் வேறு எதுவும் ஒரு கோப்பை தேநீரை விட மகிழ்ச்சியை கொடுத்துவிட முடியாது.
மகிழ்ச்சி அல்லது சோகம், மன அழுத்தம் அல்லது கொண்டாட்டம், என எல்லா சூழ்நிலைகளையும் டீ, காபியுடன் பகிர்ந்துக்கொள்பவர்கள் ஏராளம். ஆனால் இதனை எந்த நேரங்களில் குடிக்க வேண்டும்,எப்போது தவிர்க்க வேண்டும் என்பது தான் பலருக்கும் தெரிவதில்லை.
பொதுவாக பலர் உணவுக்குப் பிறகு தேநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். பலர் இதைப் பாதிப்பில்லாத போதை என்று பார்த்தாலும், மருத்துவ நிபுணர்கள் இந்தப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக கருதுவதில்லை. அதற்கு என்ன காரணம்?
பாதக விளைவுகள்
டீ காஃபினை மெதுவாக வெளியேற்றும் காபி அதனை உடனடியாக வெளியேற்றும் ஆனால் இரண்டுமே புத்துணர்வு கொடுப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
காஃபின் கலந்த பானங்களை பகலில் தாமதமாக குடிப்பது, குறிப்பாக இரவு உணவிற்குப் பிறகு, தூக்கத்தைத் தாமதப்படுத்தும். அதனால் மாலையில் 4 மணிக்கு பின்னர் டீ, காபி குடிப்பதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
படுக்கைக்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு கூட காஃபின் உட்கொள்வது மொத்த தூக்க நேரத்தின் தரத்தையும் பாதிக்கும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. காபி அல்லது டீ குடித்த பிறகு நீங்கள் தூங்க முடிந்தாலும், உங்கள் ஓய்வின் தரம் பாதிக்கப்படலாம்.
சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு கப் சூடான காபி அல்லது டீ ஆறுதல் கொடுப்பது போல் தோன்றலாம், ஆனால் அது உங்கள் செரிமான அமைப்பில் ஒரு சங்கிலி எதிர்வினையை ஏற்படுத்தி அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு காரணமாக அமைந்துவிடும். மேலும் செரிமான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
காபி மற்றும் டீ இரண்டிலும் இரைப்பை அமில உற்பத்தியைத் தூண்டும் சேர்மங்கள் செரிந்து காணப்படுவதே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட முக்கிய காரணமாகும்.
இந்த பானங்களில் காணப்படும் காஃபின், தியோப்ரோமைன் மற்றும் கேட்டசின்கள் வயிற்றில் அதிக ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை வெளியிட ஊக்குவிக்கின்றன, இது செரிமானத்திற்கு அவசியமானது, இருப்பினும் இந்த தூண்டுதல்களால் தூண்டப்படும்போது அமிலத்தன்மை அதிகரித்து உபாதைகளை தோற்றுவிக்கலாம்.
டீ மற்றும் காபியில் இரும்பை வயிற்றில் பிணைக்கக்கூடிய கலவைகளைக் கொண்டிருக்கின்றன. எனவே, உணவுக்கு பின்னர் டீ மற்றும் காபி குடிப்பதால், உடலால் இரும்புச்சத்தை உறிஞ்ச முடியாத நிலை ஏற்படும். இந்த பழக்கம் தொடர்ந்தால், இரும்புச்சத்து குறைப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |