த்ரிஷா பட சின்னப் பொண்ணா அது? ‘7ஜி ரெயின்போ காலனி - அப்போ இவுங்க தான் ஹீரோயினா?
7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்திற்கு த்ரிஷாவுடன் ராங்கி படத்தில் நடித்த சிறுமி தான் கதாநாயகியாக நடிக்கவுள்ளர் என தகவல் வெளியாகியுள்ளது.
7ஜி ரெயின்போ காலனி
தமிழ் சினிமாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி.
இந்த திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தார்.
இயக்குநர் செல்வராகவன் எழுதி இயக்கிய இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.
ஒரு தலையாக காதலிப்பவர்கள் வலி, வேதனை மற்றும் நேரம் போக்க காதலிப்பவர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது.
7ஜி ரெயின்போ காலனி 2 யார் தெரியுமா?
இந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் முயற்சியில் இப்போது செல்வராகவன் இறங்கியிருக்கிறார்.
அத்துடன் இந்த திரைப்படத்திற்கு த்ரிஷா நடித்த ராங்கி படத்தில் த்ரிஷாவின் அண்ணன் பொண்ணாக ஒரு சின்ன பெண் நடித்திருப்பார். அவர் தான் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாராம்.
இதனை தொடர்ந்து கதாநாயகர் யார் என இது வரையில் சரியான தகவல் வெளியாகவில்லை.
ரசிகர்கள் ஆர்வம் அதிகரிக்கும் பொழுது கண்டிப்பாக செல்வராகவன் முழு விபரத்தையும் கூடிய விரைவில் வெளியிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |