கருட புராணத்தில் முக்கியமான 5 கெட்ட பழக்கங்கள் எவைன்னு தெரியுமா?
கருட புராணத்தில் முக்கியமான 5 கெட்டப்பழக்கங்கள் எவை என்றும், அதனால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் பற்றி பார்ப்போம் -
கருட புராணம்
இந்து மதத்தில் கருட புரணங்கள் அடிப்படை கொள்கையாக கருதப்படுகிறது. வாழ்க்கைப் பற்றி கருடன் கேட்கும் கேள்விகளுக்கு, விஷ்ணு பகவான் பதில் அளிப்பார். இதைத்தான் கருட புராணம் என்று சொல்கிறோம். ஒருவருடைய வாழ்க்கை, இறப்பு, மறுபிறவி, இறந்த ஆன்மா உட்பட பல விஷயங்களை கருட புராணம் விளங்குகிறது.
5 கெட்ட பழக்கங்கள்
எல்லோரிடமும் கெட்டப்பழக்கம் இருக்கும். அதை விட்டுவிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். சிலர் புத்தாண்டு நாளிலோ, பிறந்த நாளிலோ கெட்ட பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று சபதம் எடுப்பார்கள். கருட புராணத்தில் குறிப்பிட்டுள்ள 5 கெட்டப்பழக்கங்கள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு செல்வம் சேரவே சேராதாம். இந்த 5 கெட்டப்பழக்கங்களை வைத்துக் கொண்டிருந்தால் வறுமை, நோய், மன அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுமாம்.
இரவில் தூங்காமல் இருப்பது
இன்றைய காலத்தில் சிலர் தாமதமாக தூங்குகிறார்கள். காலையில் தாமதமாக எழுந்திருக்கிறார்கள். இதனால், எதிர்மறை ஆற்றல் நம் வாழ்க்கையில் ஏற்படும். காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. பல தடைகள் வரும். பணப்பிரச்சினை ஏற்படும்.
வீட்டு சுத்தம்
இரவு தூங்கச் செல்லும்போது சமையலறையை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். சமையல் பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் சனியால் பல கெடுகள் வரும். மகாலட்சுமி வீட்டிற்குள் வரமாட்டார். மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
ஆடை சுத்தம்
மகாலட்சுமி தூய்மையான ஆடைகள் மட்டுமே விரும்புவாள். கருட புராணத்தின் படி சுத்தம் இல்லையென்றால் என்றாலோ, அழுக்கான உடை அணிந்தாலோ அவர்களுக்கு செல்வம் சேராது.
பேராசை
கருட புராணத்தின்படி ஒருவர் பேராசை கொண்டால் அவர்களது வாழ்க்கையில் நிம்மதி, மகிழ்ச்சி, வளர்ச்சி ஏற்படாது. மனதூய்மை : தூய்மையான உள்ளம் இல்லையென்றால் மகாலட்சுமி பார்க்கவே மாட்டாள். கெட்ட எண்ணங்கள் வைத்திருப்பவங்கள் நிம்மதியுடன் வாழ முடியாது. பணக்கஷ்டம் வந்து சேரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |