தவறிக்கூட இந்த பாவத்தை மட்டும் செய்யாதீங்க: இறந்தும் சித்ரவதை ஏற்படுமாம்
இந்த பூமியில் நாம் மனிதர்களாக வாழும் நாம் செய்யும் சில தவறுகளுக்கு இறந்த பின்பும் தண்டனை மட்டுமின்றி நரகத்திற்கு கொண்டு செல்லும் என்று கருட புராணம் கூறுகின்றது.
கருடபுராணம் வாழ்வு, இறப்பு, இறந்த பின் ஆன்மாவின் பயணம் ஆகியவற்றைப் பற்றியும் கூறுவதால், மகாபுராணம் என்றும் அழைக்கப்படுகிறது. கருடபுராணத்தில் மகாபாவங்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள செயல்களைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மரணத்திற்கு பின் சித்திரவதை
கருக்கலைப்பு: குழந்தையை வயிற்றிலேயே கொலை செய்வது கருட புராணத்தில் பெரும் பாவமாம். இந்த தவறினை செய்பவர்கள் நரகத்தில் மிகக் கொடுமையான சித்திரவதையினை அனுபவிக்க வேண்டும். ஆதலால் இதனை ஒருபோதும் செய்திவிடாதீர்கள்.
பெண்களை இழிவுபடுத்துவது: சனாதன தர்மத்தில் பெண்களை இழிவுபடுத்துவது மிகவும் மோசமான செயலாக கருதப்படுகிறது. ஆதரவற்ற, விதவை பெண்ணை அவமதிப்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது.
அப்படிப்பட்டவர்களின் ஆன்மா அலைந்து திரிந்து பல துன்பங்களை அனுபவிக்கிறது என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆதரவற்றவர்களை அவமதிப்பது: ஊனமுற்றோர், முதியோர் அல்லது ஆதரவற்றோர் எவரையும் அவமதிப்பது, கேலி செய்வது என்பது நரகத்திற்குச் செல்வதற்கான கொடும் பாவச் செயல்களாகும். அப்படிப்பட்டவர்கள் நரகத்தில் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.
ஆன்மீக நூலை அவமதித்தல்: கருட புராணத்தில் ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தவறுதலாக வேறு எந்த மதத்தையோ அல்லது வேதத்தையோ அவமதிக்க கூடாது. இதை செய்தால், அவர்களுக்கு நரகத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும்.