சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா?
பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் ஆச்சாரிய சாணக்கியர். சிறந்த இராஜதந்திரி, திறமையான பொருளாதார நிபுணர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் வாழ்க்கைத் தத்துவங்களை ஆழமாக ஆராய்ந்த ஞானியாக திகழ்கின்றார்.
சாணக்கியர் தனது வாழ்நாளில் பெற்ற அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், மனித இயல்பைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் வாழ்க்கை வெற்றிக்காக அவர் கடைப்பிடித்த நெறிமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பாகவே சாணக்கிய நீதி விளங்குகின்றது.

மனித உறவுகள், ஆட்சி, பொருளாதாரம், தலைமைத்துவம், நட்பு, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் வழங்கிய கருத்துகள் இன்றளவும் பலரால் வழிகாட்டுதலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
காலம் மாறினாலும், சாணக்கியரின் பல போதனைகள் இன்றைய வாழ்க்கைச் சூழலிலும் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன. உலகம் முழுவதும் ஏராளமானோர் அவரது சிந்தனைகளைப் பின்பற்றி வருகின்றார்கள்.

இவ்வளவு மகத்துவம் மிக்க சாணக்கிய நீதியில் இடம்பெறும் கருத்துகளின் அடிப்படையில், ஒரு ஆண் தனது மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று கூறப்படும் முக்கியமான நான்கு வி்டயங்கள் தொடர்பில் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பலவீனம்
ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, ஒருவரின் பலவீனத்தை அனைவரிடமும் வெளிப்படுத்தக் கூடாது. குறிப்பாக, அதை மனைவியிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
காரணம், உங்கள் பலவீனம் தெரிந்துவிட்டால், கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்களின் போது அதை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அவர் கருதுகிறார்.
எனவே, உங்கள் பலவீனங்களை முடிந்தவரை ரகசியமாக வைத்திருப்பதே நல்லது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

அவமானங்கள்
சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில், ஒருவர் வாழ்க்கையில் சந்தித்த அவமானங்களையும் இழிவான அனுபவங்களையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, மனைவியிடம் இதைப் பகிர்ந்தால், பின்னர் அதையே மீண்டும் நினைவுபடுத்தி கேலி செய்யவோ, வாதங்களில் பயன்படுத்தவோ வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
அதனால், இத்தகைய அனுபவங்களை வெளிப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

தானம்
சாணக்கியரின் கருத்துப்படி, தானம் என்பது விளம்பரப்படுத்தாமல், ரகசியமாகச் செய்யப்படும்போதுதான் அதன் உண்மையான பலன் கிடைக்கும்.
எனவே, தாம் செய்த தானங்களைப் பற்றி மனைவியிடமோ அல்லது மற்றவர்களிடமோ பெருமையாகக் கூற வேண்டாம் என்று அவர் வலியுறுத்துகிறார்.
அவ்வாறு கூறுவதால், தானத்தின் மதிப்பு குறைவதோடு, அதற்காகச் செலவழித்த பணம் குறித்து தேவையற்ற விமர்சனங்களும் எழலாம் என்று அவர் கூறுகிறார்.

வருமானம்
ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, தனது வருமானம் குறித்த அனைத்து விவரங்களையும் மனைவியிடம் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
வருமானம் பற்றிய முழு தகவல் தெரிந்தால், குடும்பச் செலவுகள் மற்றும் பண விஷயங்களில் அதிக கட்டுப்பாடு செலுத்த முயற்சி செய்யலாம் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
இதன் காரணமாக, சில நேரங்களில் தனிப்பட்ட தேவைகளுக்கான செலவுகளும் பாதிக்கப்படலாம். எனவே, நிதி விவகாரங்களில் புத்திசாலித்தனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என சாணக்கிய நீதி அறிவுறுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |