குருநாதருக்காக ஓடிய பார்த்திபன் - அனாதையா சாகுவ.. சாபம் விட்ட பாக்யராஜ்ஜின் அசிஸ்டன்ட்!
தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் மறைவு, திரையுலகையே இன்னும் ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
குடும்பத்தினரும், அவரது சீடர்களும், நண்பர்களும் அந்த இழப்பை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் அந்த துக்கத்தில் பாக்கியராஜ் குடும்பத்தினருக்கு நிகராக பாதிக்கப்பட்டவர் என்றால் மிகையாகாது.

பார்த்திபனின் குரு
ஒருகாலத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, அவரிடமிருந்து திரைக்கதை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு தனித்த அடையாளம் பெற்றவர் பார்த்திபன். அதனால் தான், துயர செய்தி அறிந்த நொடியிலிருந்து இறுதி சடங்குகள் முடியும் வரை, அவர் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே அனைத்து ஏற்பாடுகளிலும் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

மருத்துவமனையிலிருந்து உடலை வீட்டிற்கு கொண்டு வருதல், வந்திருந்த பிரபலங்களை வரவேற்பது, இறுதி ஊர்வல ஏற்பாடுகளை கவனித்தல், சாந்தனுவுக்கு துணையாக இருப்பது என ஓய்வில்லாமல் செயல்பட்டார்.
இறுதி ஊர்வலத்தின் போது சரத்குமாருடன் இணைந்து வாகனத்தை வழியனுப்பிய காட்சிகளும் பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்தன. மேலும், வழக்கமான மலர் அஞ்சலிக்கு மாற்றாக ஒரு தனிப்பட்ட மரியாதை செலுத்த வேண்டும் என நினைத்த பார்த்திபன், நள்ளிரவில் ஒரு ஆர்ட் டைரக்டரை தொடர்புகொண்டு “அன்புடன் உங்கள் கே. பாக்யராஜ்” என்ற கையெழுத்து வடிவ அஞ்சலி அட்டையை தயாரிக்க வைத்தார்.

அந்த அட்டை இறுதி அஞ்சலியிலும், தகனத்திற்கு செல்லும் வரையிலும் அவருடன் இருந்ததாக அவர் பின்னர் பகிர்ந்திருந்தார்.
பார்திபன் பேட்டி
இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் பார்த்திபன் பகிர்ந்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அதில், பாக்யராஜ் குழுவில் முன்னர் பணியாற்றிய ஒருவரிடமிருந்து தனக்கு கடுமையான சொற்களுடன் ஒரு மெசேஜ் வந்ததாகவும், அதில் தனிப்பட்ட விமர்சனங்களும், அவமானகரமான கருத்துகளும் இடம்பெற்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதில் குறிப்பிடப்படடதாவது, "நீதான் பாக்யராஜை பெத்து வளர்த்த மாதிரி எல்லா வேலையும் செய்ற... மற்றவர்களையும் கூப்பிட்டு வேலை சொல்லியிருக்கலாம். யாரையும் மதிக்க மாட்டே. அதனால்தான் நீ பொண்டாட்டி, பிள்ளை இல்லாம கஷ்டப்படுற. இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் செத்துப் போவ. உனக்கு யாருமே வரமாட்டாங்க" என்று மிகவும் கடுமையான வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்ததாம்.
அந்த மெசேஜுக்கு அவர் பதில் அளிக்காமல், அதை சாந்தனுவிடம் மட்டும் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
“இத்தனை துயர நேரத்தில் இப்படி பேசலாமா?” என்ற வகையில் கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |