தவறியும் 3 பொருட்களை வீட்டில் வைக்காதீக்க - இரக்கமில்லாமல் சனி கஷ்டம் கொடுப்பார்
வீட்டில் நமக்கு தெரியாமலே நாம் வைத்திருக்கும் சில பொருட்கள் மூலம் கஷ்டம் வந்து சேரும் என கூறப்படுகின்றது.
வீட்டில் வைக்க கூடாத பொருட்கள்
ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த ஆற்றல் உண்டு. சில நேரங்களில் அவை நேர்மறை ஆற்றலாகவும் சில நேரங்களில் எதிர்மறை ஆற்றலாகவும் இருக்கும்.
நம்மை அறியாமலேயே, எதிர்மறை சக்தி கொண்ட பொருட்களை வீடுகளில் வாங்கி குவித்து விடுகிறோம். அதிலும் சில பொருட்களை தேவை அறியாமலே வைத்திருக்கிறாம்.
ஆனால் இதனால் பல தீமைகள் நம்மை வந்து சேரும். அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ, எதிர்மறை ஆற்றல் கொண்ட பொருட்களை நம் சுற்றுப்புறங்களிலிருந்து அகற்ற வேண்டும்.

அவற்றின் இடத்தில், நேர்மறை ஆற்றல் நிறைந்த பொருட்களை நாம் கொண்டு வர வேண்டும். இதுவே வாஸ்து சாஸ்திரத்தின் அணுகுமுறையாகும்.
கஷ்டம் தரும் பொருட்கள்
பலர் வீட்டின் மூலையில் உடைந்த மின்னணு பொருட்களை வைத்திருப்பார்கள் வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் மூலையில் உடைந்த பொருட்களை வைத்திருப்பது வீட்டிற்கு கடுமையான நிதி நெருக்கடியைக் கொண்டுவருகிறது.
வீட்டில் துருப்பிடித்த பொருட்களை வைத்திருந்தால், சனி தேவர் கோபப்படுவார் எனவும் மேலும் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.

இதன்படி உடைந்த கடிகாரங்கள், துருப்பிடித்த இரும்பு அல்லது உடைந்த பாத்திரங்களை வீட்டில் எங்கும் வைக்கக்கூடாது. அவ்வாறு செய்வது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் என தெரிவித்துள்ளார்.
பலர் வீட்டில் பயனற்ற பழைய பொருட்களை வைத்திருப்பார்கள். இது மன உறுதியற்ற தன்மையை உருவாக்குகிறது மற்றும் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கிறது.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் மாடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அங்குள்ள தொட்டிகளில் செடிகளை நட வேண்டும். இது சுற்றுச்சூழலை சுத்திகரித்து, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாக அறிஞர்களால் கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).