இலங்கை பெண்ணை குறி வைக்கும் பிக்பாஸ் நீதிமன்றம்! அனல் பறக்கும் வாதம் பிரதிவாதம்
பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்ட முதல் நாளே ஜனனிக்கு குறி வைக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நாம் நினைத்தற்கு மாறாக 15 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியாக ஒளி பரப்பப்படுகிறது.
இதில் போட்டியாளர்களாக கலந்துக் கொள்ளும் போட்டியாளர்களில் பெரும்பான்மையினர் சின்னத்திரை பிரபலங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாவர். மேலும் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 6 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது ஆறாவது வாரம் ஆம்பித்துள்ளது. இதிலிருந்து வெளியேறும் போட்டியாளருக்கான ஒட்டிங் முறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வரும் ஜனனியின் விவகாரம்
இந்நிலையில் இந்த வாரத்திற்கு நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது முதல் வழக்காக ஜனனி , அமுதவாணனன் வழக்கு பேசப்படுகிறது, இந்த வழக்கிற்கு அசீம் வழக்கறிஞராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளி வந்துள்ளது.