110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 16 வயது சிறுமி.. எதற்காக தெரியுமா?
இந்தியாவில் கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.
16 வயது சிறுமியின் சாதனை
இந்தியாவில் மும்பை பகுதியில், கண்டிவாலி பகுதியைச் சேர்ந்த கிரிஷா என்ற 16 வயது சிறுமி. இவர் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் 16 நாட்கள் மட்டும் உண்ணாவிரதம் இருந்த இவருக்கு எந்தவொரு உடல் தொந்தரவும் இல்லை என்பதால், தனது ஆன்மீக குருவின் அறிவுரையின் படி உண்ணாவிரதத்தை 31, 51, 71 என நீட்டித்துள்ளார்.
கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி தனது உண்ணாவிரதத்தை தொடங்கிய இவர், 110 நாட்களை நிறைவு செய்து புதுிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த உண்ணாவிரதத்தால் 18 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ள கிரிஷா பேசுகையில், மன உறுதி மற்றும் மன ஒருமைப்பாடு இருந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.
இவர் உண்ணாவிரதத்தின் போது காலை 9 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை வெறும் சுடுதண்ணீர் மட்டும் அருந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |