படையப்பா படத்தில் வந்த இந்த குழந்தை பிரபல நடிகையா? யார்னு நீங்களே பாருங்க
ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில், பாசமுள்ள குழந்தையப்பா என்ற பாடல் வரி ஒன்றில் வரும் குழந்தை பிரபல ஹீரோயின் என்பது தெரியவந்துள்ளது.
படையப்பா
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபடமான படையப்பா இன்றும் மக்கள் மத்தியில் மறக்க முடியாத படமாக இருக்கின்றது.
இதில் பிரபலங்கள் ஏராளமாக நடித்துள்ள நிலையில், வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். திரையுலகில் முக்கியமான படமாக இன்றும் உள்ள நிலையில், என் பெயரு படையப்பா என்ற பாடலில் குழந்தை ஒன்று வருவதை அவதானித்திருப்போம்.
பாசமுள்ள குழந்தை அப்பா என்ற பாடல் வரியின் போது ஒரு சிறு குழந்தையின் முகம் படத்தில் இடம் பெற்று பின்பு ரஜினியின் முகம் வருகின்றது.
அந்த குழந்தை யார் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் தற்போது இந்த குழந்தை மிகப்பெரிய சீரியல் நடிகையாக வலம்வருகின்றார்.
இக்குழந்தை பிரல சீரியலான இலக்கியாவில் கதாநாயகியாக வலம் வரும் ஹேமா பிந்து என்பவர் தான்... குறித்த நடிகையை அவதானித்த ரசிகர்கள் அந்த சின்ன குழந்தையா இந்த பெண் என்று கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |