ஜப்பானிய எடை இழப்பு முறை - 12 நிமிடங்களில் கெட்ட கொழுப்பு உருகும்
எடை இழப்பில் ஆர்வமாக உள்ளவர்கள் இந்த ஜப்பானிய எடை இழப்பு பயிற்ச்சியை மேற்கொள்வது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
ஜப்பானிய எடை இழப்பு முறை
நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் எடையைக் குறைக்க முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறோம்.எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
இடுப்பு, வயிறு மற்றும் தொடைகளில் பிடிவாதமான கொழுப்பு குறைப்பது ஒன்றும் எளிதான காரியம் இல்லை.
சிலர் இந்த எடை இழப்பிற்காக பல மணிநேர ஜிம் உடற்பயிற்சிகள், கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் கார்டியோ பயிற்சிகளுக்குப் பிறகும், சிறிய வித்தியாசமே காணப்படுகிறது.

இதற்கு எடை இழப்பு முறை எவ்வளவோ பயன் உள்ளதாக இருக்கும். ஜப்பானிய எடை இழப்பு நுட்பம் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது .
இந்த நுட்பத்தில் வெறும் 12 நிமிட ஜப்பானிய சுவாசப் பயிற்சிகள் மற்றும் 10 முதல் 15 நிமிட லேசான நடைப்பயிற்சி ஆகியவை வயிற்று கொழுப்பை விரைவாகக் குறைக்கின்றன என கூறப்படுகின்றன.

ஜப்பானிய சுவாச முறை என்றால் என்ன?
ஜப்பானிய உடற்பயிற்சி நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இந்த எடை இழப்பு நுட்பம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
சுவாசப் பயிற்சிகளின் சக்தியை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சரியாக உள்ளிழுத்து வெளியேற்றுவது உடலின் கொழுப்பை எரிக்கும் திறனை அதிகரிக்கிறது என அவர்கள் அறிவுறுத்துகின்றனர் .

இதற்கு உங்கள் உடலை நேராக நிற்க வைக்க வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து பின்னர் ஆழமாக மூச்சை வெளியேற்றவும்.
இந்த சுவாசப் பயிற்சியைச் செய்யும்போது, வயிறு, மையப்பகுதி மற்றும் உதரவிதானத்தில் அழுத்தம் உருவாக்கப்படுகிறது.
இது நம் உடலை கொழுப்பை எரிக்கும் பயன்முறையில் வைக்கிறது. இந்த முறை வைரலாவதற்கு முக்கிய காரணம் அதன் 12 நிமிட கால அளவாகும். வெறும் 12 நிமிடத்தில் நமது கெட்ட கொழுப்பை கரைக்க இது பெரிதும் பயன் தரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |