திருமண ஒத்திவைப்பிற்கு பின்னர் ஸ்மிருதி மந்தனாவின் முதல் அப்டேட்
நவம்பர் 23ம் திகதி நடைபெறவிருந்த இந்திய கிரிக்கட் வீராங்களை ஸ்மிருதி மந்தானாவின் திருமணம் தள்ளிப்போனதற்கு பின்னர் தற்போது முதல் அப்டேட் கொடுத்துள்ளார்.
ஸ்மிருதி மந்தானா
நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் எதிர்பாராத உடல்நலக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு சரியான காரணம் ரசிகர்களுக்கு தெரியவில்லை. இதற்கு இடையில் முச்செல் பற்றி தவறான சர்ச்சைகளும் கிளம்பின.

ஆனால் உண்மை காரணம் மந்தானாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் திருமண நாளில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதை அடுத்து இந்த ஒத்திவைப்பு ஏற்பட்டது.
மறுநாள், மந்தானாவின் சொந்த ஊரான சாங்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பலாஷ் முச்சாலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார்.
இதனாலேயே திருமணம் தள்ளி போட பட்டதற்கு காரணம். தற்போது திருமண தாமதத்தை மந்தனாவின் மேலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அந்த அறிவிப்பின்படி சுகாதார அவசரநிலைகள் ஒத்திவைப்புக்கான காரணம் என்று குறிப்பிட்டார்.

திருமண ஒத்திவைப்பைத் தொடர்ந்து, மந்தனா தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து திருமணம் தொடர்பான அனைத்து இடுகைகளையும் நீக்கிவிட்டார், இருப்பினும் பலாஷுடன் சில சாதாரண புகைப்படங்கள் இன்னும் காணப்படுகின்றன.
ஸ்ரீனிவாஸ் மற்றும் பலாஷ் இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், ஆனால் குடும்பங்கள் இன்னும் புதிய திருமண தேதியை அறிவிக்கவில்லை. இந்த அறிவிப்பின்படி திருமணம் ஒத்திவைப்பிற்கு காரணம் மருத்துவ காரணம் என்பது தெளிவாகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |