முட்டை மற்றும் பனீர்... புரதச்சத்து எதில் அதிகம் உள்ளது தெரியுமா?
முட்டை மற்றும் பனீர் இவற்றில் புரதச்சத்து எதில் சிறந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு நபருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் அவசியமாகும். தசை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாக இருப்பது புரதச்சத்து ஆகும்.
பெரும்பாலும் உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டையை தான் புரதச்சத்திற்காக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் பால் பொருட்களான பனீரிலும் புரதச்சத்து நிறைந்து காணப்படுகின்றது.
ஆகையால் தற்போது பனீர் மற்றும் முட்டை இவற்றில் எது புரதச்சத்திற்கு சிறந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முட்டை மற்றும் பனீர்
முட்டை ஒன்றில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளதுடன், உடம்பிற்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளது. மேலும் முட்டையின் புரதம் எளிதில் உறிஞ்சப்படுகின்றது.
ஆனால் 100 கிராம் பனீரில் 18 கிராம் புரதம் உள்ள நிலையில், இவை செரிமானம் ஆவதற்கு அதிகமாக நேரத்தினை எடுக்கின்றது. குறிப்பிட்ட அளவில் அதிக புரதம் தேவையெனில் பனீரை எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சிக்கு பின்பு சேதமடையும் தசைகளை சரிசெய்வதற்கு முட்டை மிகவும் சிறந்ததாகும். முட்டையில் உள்ள Leucine என்ற அமினோ அமிலம், உடற்பயிற்சிக்கு பின் தசை வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.
பனீரில் Casein என்பது மெதுவாக செரிமானத்தை கொண்டுள்ளது. ஆனால் தசைகளுக்கு தேவையான ஆற்றலை நீண்ட நேரத்தில் வழங்குகின்றது. இரவு தூங்குவதற்கு முன் பன்னீர் சாப்பிடுவது தசைகள் மீள்வதற்கு உதவும்.

எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது முட்டையாகும். ஏனெனில் இதில் 70 கலோரிகள் உள்ளது. ஆனால் பாலில் அதிக கலோரிகள் இருப்பதுடன், உடல் எடையை குறைப்பவர்களுக்கு சவாலாகவும் இருக்கும்.
ஆனால் நமது ஆரோக்கியத்திற்கு ஒன்றை மட்டும் நாம் தெரிவு செய்யாமல் இரண்டையும் சமமாக சேர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |