குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் - இவர்கள் தான் எதிர்கால பணக்காரர்கள்
நவகிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் என்று சில உள்ளன. அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

குரு பகவான்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவக்கிரகங்களில் சுப கிரகமாக கருதப்படுபவர் குரு. ‘குரு பார்க்க கோடி புண்ணியம் கிடைக்கும்’ என்பது நம்பிக்கை.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்மொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தால் அனைத்து ராசிகளுக்கு செல்வத்தை வாரி வழங்குவார். இதனால் ஜோதிடத்தில் குருவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஜோதிடத்தில் குரு பகவானுக்கு சில ராசிகள் பிடிக்கும் என கூறப்படுகின்றது. அந்த ராசிகள் யார் என்பதையும் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை பற்றியும் பார்க்கலாம்.

கடகம்
- ஜோதிட சாஸ்திரத்தின்படி கடக ராசி குரு பகவான் உச்சம் பெறுவார் அதாவது குருவின் முழு பலமும் கடக ராசியில் தான் வெளிப்படும்.
- இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் கூடவே இருக்கும்.
- இவர்களிடம் நிர்வாகத் திறமை, தலைமைப் பண்புகள் பிறப்பிலிருந்தே இருக்கும் என கூறப்படுகின்றது.
- சொத்து சேர்க்கை போன்றவை எளிதாக கிடைக்கும்.
- இவர்கள் எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்கப்படுவார்கள். குருவின் ஆசி இவர்களுக்கு கூடவே இருக்கும்.
விருச்சிகம்
- குருவும் செவ்வாயும் நட்பு என்பதால் குருவுக்கு விருச்சிக ராசி நட்பு வீடாகும்.
- இதனால் குரு பகவான் விருட்சிக ராசிக்கு விடாமுயற்சியையும், துணிச்சலையும் கொடுக்கிறார்.
- ரகசியமான விஷயங்களை கண்டுபிடிப்பதிலும், மருத்துவத் துறையிலும் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
- தொழில் மற்றும் வேலை பற்றி இவர்களு்க்கு சொல்ல தேவை இல்லை.
- குருவின் ஆசி இவர்களுக்கு எப்போதும் கூடவே இருக்கும் என்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும்.
தனுசு
- தனுசு ராசி குரு பகவானின் சொந்த ராசியாகும். இது குருவின் ஆட்சி வீடு என்று அழைக்கப்படுகிறது.
- இந்த ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்களாகவும், ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
- குரு தனுசு ராசியின் சொந்த வீடு என்பதால் இவர்க்கு கஷ்டம் வரும் அதன் பின் பேரதிர்ஷ்டம் வரும்.
- இவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலோ அல்லது தடுமாற்றத்தை சந்தித்தாலோ இறுதியில் குருவின் அருளால் முழுமையான வெற்றி கிடைக்கும்.
- கல்வி மற்றும் ஞானத்தில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மீனம்
- மின ராசிக்கும் சொந்த கிரகம் கரு தான்.
- இதனால இவர்கள் இரக்க குணமும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள்.
- மீன ராசிக்காரர்களுக்கு ஆழ்மன சிந்தனை கற்பனைத் திறன் அதிகம்.
- குருவின் ஆதிக்கத்தால் இவர்கள் சமுதாயத்தில் பெரும் மதிப்பையும், மரியாதையும் பெறுவீர்கள்.
- உங்களுக்கு பொருளாதாரத்தில் பிரச்சனை வராது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).