ஆரம்பமாகும் ராகு பெயர்ச்சி... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு?
ராகு பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசியினர் நன்மையை பெறுகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு பெயர்ச்சி
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு கிரகங்களுக்கும் சில ராசிகள் பிடித்தமான ராசியாகவும் இருக்கின்றது.
ஆதலால் இந்த ராசிகளின் கிரக நிலையிலனால் அதிர்ஷ்டம், செல்வம் என அனைத்தும் கிடைக்கும். இந்நிலையல் ராகு பகவான் மார்ச் இறுதியில் ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திற்கு பெயர்ச்சியடைகின்றார்.
இந்நிலையில் ராகு பகவானுக்கு பிடித்த நான்கு ராசிகளுக்கு கிடைக்கும் அதிர்ஷடத்தினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசி ராகு பகவானுக்கு பிடித்த ராசியாக உள்ள நிலையில், எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். தொழில், வேலை சிறப்பாக இருக்கும் நிலையில், எதிர்பாராத வெற்றி, லாபமும் கிடைக்கும்.
பணி செய்யும் இடங்களில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியும் ராக பகவானுக்கு பிடித்த ராசியில் ஒன்றாக இருக்கின்றது. இவர்கள் இந்த காலத்தில் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.
ராகுவின் பார்வை சாதகமாக இருப்பதால்தொழில், வேலையில் வெற்றி கிடைப்பதுடன், பல வழியில் இருந்து வருமானமும் கிடைக்கின்றது.
உடன் பிறந்தவர்களின் ஆதரவும் கிடைத்து மகிழ்ச்சியளிக்கும் நிலையில், கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனையும் நீங்குகின்றது.

மகரம்
மகர ராசியும் ராகுவிற்கு பிடித்த ராசியாக உள்ள நிலையில், இக்காலக்கட்டத்தில் நேர்மறையான ஆற்றலை ராகு கொடுப்பதுடன், கூட்டு தொழிலும் வெற்றியும் கிடைக்கின்றது.
திருமண தடைகள் நீங்கி, ராகுவின் அருளால் நல்ல வரன் உங்களுக்கு கிடைப்பதுடன், வீட்டில் சுப காரியங்கள் நடக்கவும் செய்யும்.

கடகம்
ராகுவிற்கு படித்த கடக ராசியினருக்கும் சாதகமான பலன் கிடைப்பதுடன், கஷ்டங்களும் தீருகின்றது. ராகுவின் அருளால் வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும்.
புதிய பொறுப்புகள், அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தியும் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதுடன், உயர் கல்விக்கு வெளிநாடுகளுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |