Astrology: இவங்க தோல்வியடைந்தாலும் கெத்தாகவெ இருப்பார்களாம்.. நீங்களும் இந்த ராசியா?
வாழ்க்கை எப்போதும் சுமூகமாக இருக்காது. மாறாக நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு பல சவால்கள், தடைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
இவற்றை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் சிலர், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் பின்வாங்காமல் நடந்து கொள்வார்கள்.
தனக்கு முன்னால் யார் நின்றாலும், அவர்கள் தலை வணங்க மாட்டார்கள். தைரியமாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எப்போதும் தான் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இலக்குகளை அடையவே முயற்சி செய்வார்கள்.
அந்த வகையில், என்ன நடந்தாலும் கெத்தாகவே நிற்கும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் உண்மையான போராளிகளாக இருப்பார்கள். ராமர் பிரதிநிதியாக இருக்கும் இவர்கள் மற்றவர்களை விட தைரியசாலிகள், தன்னிச்சையாக முன்னேறுபவர்களாக இருப்பார்கள். ஒருமுறை தன்னுடைய இலக்கை முடிவு செய்து விட்டால் அவர்கள் காட்டும் வேகம், தைரியம் அசாதாரணமானதாக இருக்கும். அவர்களின் நம்பிக்கை, உறுதிப்பாடு அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தடையையும் கடக்க அவர்களுக்கு சக்தி கொடுக்கிறது. |
ரிஷபம் | ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கொஞ்சம் மெதுவான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் தன்னுடைய இலக்கை நோக்கி முன்னேறுவார்கள். காளை சின்னமாக இருக்கும் இவர்கள் ஒருமுறை எதையாவது முடிவு செய்தால், அந்த பாதையில் இருந்து விலக மாட்டார்கள். பாதகமான சூழ்நிலைகள் வந்தாலும் அதற்கான முன் நிற்பார்கள். அவர்களின் உறுதி இலக்கில் வெற்றியை கொண்டு வரும். தோல்வியை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் |
மகரம் | உழைப்பில் கடவுள் இவர்கள் பக்கம் தான் இருப்பார். மற்ற ராசிகள் போல் அல்லாமல் மகர ராசியில் பிறந்தவர்கள் தீவிரம், கட்டுப்பாட்டிற்கு பெயர் போனவர்கள். ஆடு சின்னமாக இருப்பதால் தங்கள் இலக்குகளில் முழு கவனம் செலுத்தி, ஒரு அடி கூட பின்வாங்காமல் செயற்படுவார்கள். வெற்றியின் பாதையில் செல்வது கடினம் என்றாலும் உறுதியுடன் முன்னேறுவார்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கும் குணம் கொண்டவர்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).