மனைவியை பிரிந்து விட்டாரா மதன்கௌரி! ஹோம் டூர் வீடியோவில் லீக்கான காட்சி...
பிரபல யூடியூடிப்பர் மதன் கௌரி தன்னுடைய திருமண வாழ்க்கையிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காதலி பிரிந்து சோகத்தில் பிரபல்யமாகியவர்
பொதுவாக சிலர் காதலி பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது இன்னொரு வாழ்க்கை கோபத்தில் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் இது போன்று எல்லாம் செய்யாமல் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை பார்ப்பவர்கள் இந்த உலகத்தில் குறைவான எண்ணிக்கை தான் காணப்படுகிறார்கள்.
அந்த வகையில், காதலி விட்டு போன சோகத்தில் யூடியூப் சேனலொன்றை ஆரம்பித்து அதில் பல வீடியோக்கள் போட்டு பிரபல்யமாகியவர் தான் மதன்கௌரி.
இவர் காதலித்த பெண் இவரை விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் யூடியூப் சேனலொன்றை ஆரம்பித்து தற்போது பலக் கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இவரின் வீடியோக்கள் பார்ப்பதற்கு தத்துருவமாக இருப்பதாலும், இவரின் குரலை கேட்பதற்கு அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் இருப்பதாலும் இவரின் புகழ் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
சர்ச்சையில் சிக்கிய பிரபலம்
இந்த நிலையில், சமிபத்தில் மதன்கௌரி அவரின் வீட்டை ஹோம் டூர் செய்திருந்தார். அதில் தன்னுடை அம்மா, தங்கை குறித்து பேசிய மதன் தன்னுடைய மனைவியும் குறித்து எந்த விதமான தகவலையும் வெளியிடவில்லை.
மேலும் வீட்டை சுற்றி காட்டும் போது, அவரின் திருமணம் சம்பந்தப்பட்ட எந்த விதமான புகைப்படங்கள் மற்றும் சான்றுகள் எதுவும் இல்லை. இதனால் இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள், நீங்கள் இருவரும் விவாகரத்து செய்துவீட்டிர்களா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இதற்கு மதனும் ஆதரவளிக்கும் வகையில் இவருடைய யூடியூப் சேனலில் இருந்து அவருடைய திருமண வீடியோக்கள் மற்றும் அவரின் சமூக வலைத்தளங்களில் இருந்து திருமண புகைப்படங்கள் என அனைத்தும் நீக்கியுள்ளார்.
இது போன்ற சான்றுகள் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.