திடீரென திருமண வீடியோவை வெளியிட்ட நடிகை அமலா பால்- இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அமலா பால், இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து பின்னர், விவாகரத்து செய்துகொண்டார்.
விவாகரத்துக்கு பின்னரும், படங்களிலில் நடிப்பதும், கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும், பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரை அமலா பால் ரகசிய திருமணம் பண்ணிக்கொண்டதாக கடந்த வருடம் தகவல் பரவியது. திருமண கோலத்தில் இருவருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால் அந்தத் தகவல் உண்மையில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், அமலா பால் மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார்.
தன்னுடைய தம்பி அபிஜித்தின் திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட விடியோவை பகிர்ந்து தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.