ஹோம் டூர் செய்து அசத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! அதிர்ந்து போன நெட்டிசன்கள்
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா அவரின் வீட்டை சுற்றி காட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியல் வாழ்க்கை
தமிழில் சமிபத்தில் வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் புஸ்பாவாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரேஷ்மா.
இதனையடுத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டாம் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.
இவருடைய யதார்த்தமான நடிப்பாலும், சில சீன்களுக்கு இவர் கொடுக்கும் ரியாக்ஷன் மூலமும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்த சீரியல் முதலில் பெரியளவில் வரவேற்பை பெறவிட்டாலும், தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்பட்ட புதிய திருப்பம்
இதனை தொடர்ந்து தற்போது பாக்கிலட்சுமி சீரியலில் புதிய டுவிஸ்ட்டை இயக்குநர் வைத்துள்ளார். அந்த வகையில் கோபி தற்போது பாக்கியா மற்றும் கோபியின் பெற்றோர் இருக்கும் வீட்டை விற்கும் முடிவிற்கு வந்துள்ளார்.
மேலும் இன்னும் ஒரு மாத காலம் அவகாசத்தில் 70 லட்சத்திற்கு வீட்டை வாங்காவிட்டால் விற்று விடுவேன் என்று மிரட்டிச் சென்றுள்ளார்.
இந்த வீட்டை அப்பாவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக எழில் தன்னுடைய கதையை விற்று பணத்தை திரட்டலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளார்.
ஹோம் டூர் செய்து அசத்திய பிரபலம்
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில், முக்கிய வேடத்தில் நடிக்கும் ரேஸ்மா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இதன்படி, சமிபத்தில் தன்னுடைய வீட்டைச்சுற்றி காட்டி, அதிலிருக்கும் பிரபல்யமான விடயங்களை ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “ரேஷ்மாவின் வீடு இவ்வளவு குட்டியா? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.