அட வசூலில் மாஸ் காட்டும் யூத் - 2 நாட்களில் எவ்வளவு தெரியுமா?
யூத் (Youth) படம் கடந்த 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. தற்போது 2 நாட்களுக்கான வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

யூத்
அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானவர் தான் கென் கருணாஸ். இதனை தொடர்ந்து வாத்தி, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது கென்னின் புதிய முயற்ச்சியாக அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் யூத். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மேலும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைந்துள்ளதார்.தற்போது படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க பள்ளி, கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த திரைபடத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

2 நாட்கள் வசூல்
நகைச்சுவை, எமோஷன், காதல் என எல்லாமே யூத் படத்தில் இருந்தது. தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது 2 நாட்களை கடந்திருக்கும் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகமாக எதிர்பாக்கலாம் எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |