மொபைல் Storage-ஐ அதிகப்படுத்தணுமா? இதை மட்டும் செய்தால் போதும்
மொபைல் போனை அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் ஸ்டோரேஜை அதிகப்படுத்த முடியுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மொபைல் Storage
இன்று பலரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திவரும் நிலையில், அதன் ஸ்டோரேஜ் குறைவாகவே இருக்கும். தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு போனுக்கு ஏற்ப ஸ்டோரேஜை வழங்குகின்றது.
மேலும் அதற்கேற்ப விலையையும் நிர்ணயிக்கின்றது. அவ்வாறு அதிக பணம் கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்கினாலும், ஸ்டோரேஜ் பிரச்சனை என்பது நீங்காத ஒன்றாக இருக்கின்றது.
ஏதேனும் புதிய ஆப்-பை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்கும் போது, அந்த ஆப்-க்கு இடமில்லாமல் போனால், சிக்கல் ஏற்படுகிறது.
Joe Fedewa / how to geek
எதனால் Storage நிரம்புகின்றது?
உங்களது போனில் ஸ்டோரேஜ் நிரம்புவதற்கு பல காரணங்கள் உள்ளது. நாம் பயன்படுத்தும் முக்கிய ஆப், புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் மற்றும் பல கோப்புகளும் உள்ளது.
இது மட்டுமின்றி சில கேச் ஃபைல்களும் உள்ளதால், மிக விரைவில் Storage நிரம்பிவிடுகின்றது. பெரும்பாலான ஆப் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படுவதில்லை.
இவ்வாறான ஆப் டிவைஸில் அப்படியே இருப்பதால், அதன் திறன் மிக அதிகமாக இருந்து இடத்தையும் நிரப்புகின்றது. அத்தகைய சூழ்நிலையில், முற்றிலுமாக அதனை நீக்கிவிட வேண்டும்.
தற்போது மொபைல் போனின் இடத்தினை தக்க வைத்துக் கொள்வதற்கு என்னென்ன வழிகளை நாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Image credit: Future
Storage-ஐ அதிகப்படுத்த என்ன செய்யலாம்?
ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்வதன் காரணமாக தொலைபேசியில் அதிகமான கேச் ஆப்-கள் குவிந்துவிடுகின்றது. மேலும் இதனை அகற்றாவிட்டால், போனில் அதிகமான இடத்தினை எடுத்துக் கொள்ளும். இம்மாதிரியான கேச் ஆப்களை அழிப்பதற்கு போலி ஆப்களை பயன்படுத்துவதால், சரியாக கேச் கோப்பு அழிக்கப்படாமல் இருந்து இடத்தை ஆக்ரமித்து கொள்ளும். ஆதலால் சரியான செயலியை தெரிவு செய்து கேச் கிளியர் செய்யவும்.
நீங்கள் வைத்திருக்கும் புகைப்படங்கள், காணொளிகள் இவற்றினை சேமித்து வைப்பதற்கு கிளவுட் சேவையை பயன்படுத்தலாம். ஏனெனில் கிளவுட் சேவையில் இவை பாதுகாப்பாக இருப்பதுடன், போனின் சேமிப்பும் அதிகமாகும். மேலும் கிளவுட்டில் முக்கியமான பைல்களை சேமித்துவிட்டு தேவையற்றதை அழித்துவிடவும்.
பல ஸ்மார்ட்போனில் புல்ட்-இன் ஸ்டோரேஜ் ஆப்டிமைசேஷன் அம்சங்களை வழங்குகின்றன. இதன் மூலம் ஆட்டோமெடிக்கல் மேனேஜ் பைல்ஸ், கிலியர் டெம்ப்ரவரி பைல்ஸ், ஆப்டிமைசேஷன் ஸ்டோரேஜ் யூசேஜ் போன்றவற்றை இயக்கவும்.
உங்கள் மொபைலை அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் டெம்ப்ரவரி பைல்ஸ் மற்றும் சிஸ்டம் கேச்களை அழிக்க முடியும். இதனாலும் உங்களது மொபைல் போனின் இடத்தினை மிச்சப்படுத்த முடியும்.
முக்கியமான பைல்கள் மற்றும் புகைப்படங்களை உங்களின் பேர்சொனல் இமெயில் அக்கௌன்ட்க்கு இமெயில் செய்யவும். இது அத்தியாவசிய பைல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் உங்கள் மொபைலில் இடத்தை மிச்சப்படுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |