விண்வெளி வீரர்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம்
விண்வெளி வீரர்கள் இன்றி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு ஸ்டார்லைனர் விண்கலம் வந்தடைந்தது.
பூமிக்கு திரும்பிய ஸ்டார்லைனர்
கடந்த ஜூன் மாதம் 5 -ம் திகதி, போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner spacecraft) ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (International Space Station) சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பபட்டனர்.
இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஜூன் 6 -ம் திகதி சென்றடைந்தனர். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா அறிவித்தது.
ஆனால், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், கோளாறு சரிசெய்யபட்ட நிலையிலும் இருவரையும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரவேண்டாம் என நாசா முடிவெடுத்தது.
இதனால் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டது.
அதன்படி, இந்த மாதத்தின் இறுதியில் க்ரு டிராகன் விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விண்வெளி வீரர்கள் இன்றி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு ஸ்டார்லைனர் விண்கலம் வந்தடைந்தது.
சமார் 6 மணி நேர பயணம் செய்த ஸ்டார்லைனர் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது. நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் இந்திய நேரப்பபடி இன்று காலை 9.30 மணியளவில் தரையிறங்கியது.