உலர்ந்த உதடுகளை பொலிவாக்க வேண்டுமா? அப்போ பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க
பொதுவாக நம்மில் பல பெண்கள் சரும பராமரிப்பில் பெரிதும் கவனம் செலுத்துபவர்கள்.
முகத்திற்கு விதவிதமான பேஸ் பேக்குகளை பயன்படுத்துவதுண்டு. முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உதடுகளுக்கு கொடுக்க தவறிவிடுவார்கள். இதனால் உதடுகள் பொழிவிழந்து கருமையாகிவிடுகின்றது.
உதட்டு பராமரிப்புக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்று தெரியாமல் குழம்பி விடுவார்கள். இருப்பினும் இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட சரி செய்ய முடியும். இதற்கு பீட்ரூட் உதவி புரிகின்றது.
இதனை எப்படி பயன்படுத்தினால் உதடுகளை அழகாக மற்றும் பொலிவாக மாற்றலாம் என்பதை பார்ப்போம்.
பீட்ரூட்டை எவ்வாறு பயன்படுத்துவது?
தினமும் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், உதடுகள் மென்மையாக மாறும். மேலும் உதடுகளில் உள்ள வெடிப்புகள், கோடுகளை குறைத்து இளமை பொலிவை தக்க வைக்கும்.
பீட்ரூட்டை நன்றாக மசித்து, அதனுடன் சர்க்கரை கலந்து பசை போல் குழப்பி இந்த கலவையுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து தினமும் உதட்டில் தடவி வரலாம். இதனால் இறந்த செல்கள் அகற்றப்பட்டு உதடுகள் மென்மையாகவும், பிரகாசமாகவும் மாறும்.
ஒரு துண்டு பீட்ரூட்டை அரை மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைத்துவிட்டு, அதனை உதடுகள் மீது தடவி சில நொடிகள் தேய்த்தாலே போதும். உதடுகள் ரோஜாபூவை போல பொலிவுடன் காட்சி அளிக்கும்.
ஒரு டீஸ்பூன் பீட்ரூட் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து உதடுகள் மீது தேய்த்து வந்தாலும் உதடுகள் பிரகாசமடையும்.