கர்ப்பிணி பூனையை காப்பாற்றியவருக்கு அடித்தது ஜாக்பாட்- எத்தனை லட்சம் தெரியுமா?
துபாயில் மாடியில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பூனையை காப்பாற்றியவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
துபாயின் டெய்ரா பகுதியில் உள்ள அல் மாரில் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த பலர் வசிக்கிறார்கள். இவர்களில் சிலர் வீட்டில் பூனை வளர்க்கிறார்கள்.
கடந்த 24ம் தேதி அந்த குடியிருப்பின் 2வது மாடியின் பால்கனி சுவற்றின் மீது நடமாடி கொண்டிருந்த பூனை, திரும்ப வீட்டிற்குள் செல்ல முடியாமல் கீழே விழும் நிலையில் இருந்தது.
இதனை கண்ட அங்கு வசிக்கும் நசீர் முகமது என்பவர், அந்த பூனையை காப்பாற்ற முயன்றார். உடனடியாக அப்துல் ரசீத் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த மேலும் இருவரை அழைத்து, தன்னிடம் இருந்த ஒரு துணியை பூனை விழும் பகுதியில் வலை போல் விரித்து பிடித்தார்.
மாடியிலிருந்து தவறி விழுந்த பூனை அதிர்ஷ்டவசமாக இவர்கள் விரித்த துணியில் விழுந்ததால் காயமின்றி தப்பியது, இந்த வீடியோ வெளியாக சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இதனை கண்ட அந்நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது, கர்ப்பிணி பூனையை காப்பாற்றிய நான்கு பேரை பாராட்டியதுடன், தலா 10 லட்ச ரூபாய் பரிசளித்து கௌரவித்துள்ளார்.
الراحمون يرحمهم الرحمن …
— HH Sheikh Mohammed (@HHShkMohd) August 24, 2021
فخور وسعيد بكل مظهر للرحمة في مدينتنا الجميلة …
من يعرفهم يدلنا عليهم لنشكرهم .. pic.twitter.com/eTdmYiTSWb