கோட் படத்தில் இளைஞராக மாறிய விஜய்... எப்படி இது சாத்தியமானது தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தினை பற்றி தெரிந்து கொள்வோம்.
கோட்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய கோட் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இளம் வயது விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் மற்றும் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் மிகவும் பிரமிக்க வைத்த விடயம் என்னவெனில் விஜய்யின் டீ.ஏஜிங் லுக் தான்.
அதாவது டீ ஏஜிங் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளம்வயதில் இருப்பவர் போன்று இயக்குனர் காட்டியுள்ளார்.
டீ ஏஜிங் என்றால் என்ன?
டீ ஏஜிங் என்பது ஒரு விஷுவல் எஃபெக்ட்ஸ் டெக்னிக். இதன்மூலம் ஒரு வயதான தோற்றத்தில் இருக்கும் நபரை மிகவும் இளமையாக காட்ட முடியும்.
அவர்கள் சிறுவயது கதாபாத்திரத்தை கூட இந்த டீ ஏஜிங் மூலம் திரையில் கொண்டு வர முடியும் என்பதால் தற்போது சினிமாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
முதலில் குறித்த நபரின் முகத்தில் மீசையோ, தாடியோ இல்லாமல் முழுவதுமாக ஸ்கேன் செய்துவிட்டு, பின்பு முகத்தின் ஒவ்வொரு பாகங்களின் அசைவுகளை படம்பிடித்து, டீ ஏஜிங் செய்யப்படுகின்றது.
இப்படத்தில் டீ ஏஜிங் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. AI உதவியுடன் தான் இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தை கேமியோ ரோலில் நடிக்க வைத்துள்ளனர். அதேபோல் AI உதவியுடன் பவதாரிணியின் குரலை ஒரு பாடலுக்கு பயன்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |