துணிவு திரைப்படம் பார்த்து திருட முயற்சித்த இளைஞர்! சரமாறியாக தாக்கிய வாடிக்கையாளர்கள்: இறுதியில் நடந்தது என்ன?
இந்தியாவில் திண்டுக்கல் பகுதியில் துணிவு திரைப்படத்தை பார்த்து விட்டு, திருட முயற்சித்த இளைஞரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சம்பவம் இடம்பெற்ற இடம்
இந்தியாவில் - திண்டுக்கல் பகுதியிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் எனும் பெயர்க் கொண்ட வங்கியிலுள்ள பணியாளர்கள் வழமைப்போல் வங்கிக்கு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த இளைஞர், வங்கியினுள் வந்து பணியாளர்களை கட்டிவைத்து மிளகாய் பொடி அடித்துள்ளார்.
காரம் அதிகமாகியதால் பணியாளர்கள் குச்சலிட ஆரம்பித்துள்ளார்கள். இதனை கேட்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வங்கியினுள் வந்து இளைஞரை பிடித்து தர்ம அடிக் கொடுத்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து அருகாமையிலிருக்கும் திண்டுகல் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக இளைஞரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் வெளியான விடயங்கள்
இந்நிலையில் பொலிஸார் விசாரணையில் மெய்சிலிர்க்க வைத்த பல விடயங்கள் வெளியில் வந்துள்ளது.
இதன்படி, இவர் பல திரைப்படங்கள் பார்த்து இந்த திருட்டை பார்த்ததாகவும் சமிபத்தில் வெளியாக துணிவு திரைப்படம் தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விரக்தியில் இருப்பதால் இந்த முடிவிற்கு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் கோவத்தில் கொந்தளித்துள்ளார்கள்.