முதல் முறையாக தனது நாத்தனாருடன் புகைப்படம் வெளியிட்ட டிடி! குவியும் லைக்குகள்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி-யின் தம்பி தர்ஷன் சமீபத்தில் கிர்கிஸ்தானை சேர்ந்த அஜார் என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியிருந்தது.
இந்நிலையில், தொகுப்பாளினி டிடி முதல் முறையாக தனது நாத்தனாருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவரை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. காரணம் அந்தளவுக்கு ரசிகர்களுக்க மிகவும் பரீச்சையமான ஒருவர்.

அவரது இயல்பான பேச்சு, நகைச்சுவை கலந்த உரையாடல், செலிப்ரிட்டிகளை சௌகரியமாக பேச வைக்கும் திறன் ஆகியவை அவரை முன்னணி தொகுப்பாளினியாகவே இன்றுவரையில் நிலைத்திருக்க செய்துள்ளது.

அண்மையில், டிடியின் தம்பி தர்ஷனுக்கும் அஜார் என்ற கிர்கிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கும் திருணம் நடைபெற்றது.

குடும்பதினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மாத்திரமே இதில் கலந்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது டிடி முதல் முறையாக தனது நாத்தனாருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |