கொசுவர்த்தியால் ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
கொசுவர்த்தியை ஏற்றி வைத்து உறங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பால கிருஷ்ண தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (23). இவர் ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவதன்று ஜெகதீஷ் இரவு தூங்க செல்லும் முன் வழக்கம் போல கொசுவர்த்து ஏற்றி விட்டு உறங்க சென்றுள்ளார்.
அப்போது, தாயின் புடவையை போற்றியவாறு தூங்கிய போது அருகில் இருந்த கொசுவர்த்தி புடவையின் மீது விழுந்து தீ பற்றியுள்ளது.
உடனே அலறிய ஜெகதீஷ் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்கள் ஓடி வந்துள்ளனர். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.