சிறுவயதில் நீரிழிவு நோய் ஏற்படுவது ஏன்? அதிர்ச்சி உண்மை இதோ
இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் நீரிழிவு நோயினால் பல உணவுப்பொருட்களை சாப்பிடலாமா என்ற சந்தேகமே அதிகமாக உள்ளது. மேலும் சிறுவயதிலேயே நீரிழிவு நோய் ஏற்பட்டு வருகின்றது.
சிறுவயதில் நீரிழிவு நோய்
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருளை நாம் உணவாக எடுத்துக் கொள்வது தான் நீரிழிவு நோய்க்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
முன்பெல்லாம் 40 அல்லது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே நீரிழிவு நோய் இருக்கிறதா என்று சோதனை செய்த நிலையில், தற்போது 25 வயதைக் கடந்தாலே நீரிழிவு பரிசோதனை எடுக்க மருத்துவர்கள் கோருகின்றனர்.
முன்பு மனிதர்கள் தங்களது உடல் உழைப்பு அதிகமாக செயல்படுத்தினர். இதனால் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் நிறைந்த உணவு சாப்பிட்டாலும், அதனை கரைக்கும் அளவிற்கு உடல் உழைப்பு இருந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பசி ஏற்பட்ட பின்பு சாப்பிடும் வழக்கமும் இருந்தது. ஆனால் தற்போது நேரம் பார்க்காமல் நினைத்த நேரத்தில் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளே அதிகமாக இருந்துள்ளது.
நாம் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.
சரியான உணவு பழக்க வழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவை இருந்தால் இளம் வயதில் வரும் நீரிழிவு நோயை தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |