நீரிழிவு நோயை விரட்டும் பிளாக் காபி.. தினமும் குடிக்கலாமா?
பொதுவாக காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், பால், காபி டிகாஷன், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து ஒரு காபி போடும் போது தூக்கம் தன்னால் சென்று விழிப்பு வந்து விடும்.
பால் கலந்த காபியை விட சாதாரண கருப்பு காபி (பிளாக் காபி) பருகுவது உடலுக்கு ஆரோக்கியம் வாய்ந்தது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு தயாரிக்கப்படும் பிளாக் காபியில் சர்க்கரை, கொழுப்பு, கலோரிகள் சேர்க்கப்படாமல் இருப்பதால் உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
அந்த வகையில் இவ்வளவு சிறப்புகள் பொருந்திய பிளாக் காபியை தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
பிளாக் காபி தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1. அல்சைமர் நோய்
அல்சைமர் நோய் என கூறப்படுவது நினைவாற்றல் இழப்பு, சிந்தனை திறன் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் காலையில் பிளாக் காபி குடிக்கலாம்.
தினமும் 2 அல்லது 3 கப் அளவு பிளாக் காபி குடிப்பது நோயை 65 சதவீதம் குணப்படுத்தும்.
2. எடை குறை
பொதுவாக டயட்டில் இருப்பவர் பால் கலந்த எந்த உணவுகளையும் பெரிதும் விரும்பமாட்டார்கள். இதனால் பிளாக் காபி எடுத்து கொள்வார்கள். இந்த பிளாக் காபியில் உடல் எடையை குறைக்கவும், குளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக்கவும் உதவும் குளோரோஜெனிக் அமிலங்கள் இருக்கின்றன.
இது எடையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும். இதனை தொடர்ந்து கலோரிகளும் குறைவாக இருக்கின்றது.
3. நீரிழிவு நோய்
நீரழிவு நோயாளர்களுக்கென ஐரோப்பியவில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், கருப்பு காபி உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நீரிழிவு அபாயத்தை குறைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |