வீட்டிலேயே செய்யலாம் கார முட்டை தோசை! ரெசிபி இதோ
நாம் பொதுவாக வீட்டில் தோசை செய்வது வழக்கம். அந்த வகையில் பல வகையான தோசையை நாம் செய்து சாப்பிட்டு இருப்போம்.
காலையில் வேலைக்கு செல்லும் போது அவசர உணவாக தோசை இருக்கின்றது. தேசை செய்வது மிகவும் ஈஸி ஆனால் வித்தியாசமான முறையில் கார முட்டை தோசை செய்திருக்கிறீர்களா? அதற்கான ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வர மிளகாய் - 20
- பூண்டு - 12 பல்
- சின்ன வெங்காயம் - 15
- உப்பு - தேவையான அளவு
- புளி - தேவையான அளவு
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- கடுகு - அரை டீ ஸ்பூன்
- சீரகம் - கொஞ்சம்
- முட்டை- 1
- நெய் - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் கார சட்டினி செய்வதற்காக வர மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்பு மிளகாயை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு, புளி மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மை போல அரைத்து கொள்ள வேண்டும்.
நீங்கள் அரைப்பதற்கு மிளகாய் ஊற வைத்த தண்ணீரையும் பயன்படுத்தி அரைத்து கொள்ளலாம்.
பின்னர் அரைத்த சட்டினியை பச்சை சுவை மாறுவதற்காக கொஞ்சமாக தாளிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்த சட்டினியை சேர்த்து பின்பு வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடாகியதும் தோசை மாவு ஒருகரண்டி அளவிற்கு ஊற்றி அதற்கு மேல் அரைத்த சட்டியை சேர்க்க வேண்டும்.
பின்னர் ஒருமுட்டையை நன்றாக மிக்ஸ் செய்து தோசைக்கு மேல் ஊற்ற வேண்டும்.
பின்னர் அதற்கு மேல் கொஞ்சம் உப்பு, மிளகு பொடி ,பொடியாக நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து கொஞ்சம் நெய் சுற்றிவிட்டு தோசையை திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும். சுடசுட கார முட்டை தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |