மனித மூளைக்குள் சிப்… சாதனை படைத்த எலான் மஸ்க்கின் நியூராலிங்க்!
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், Neuralink என்ற நிறுவனம் தொடங்கி மனித மூளையில் சிப் பொருத்தும் ஆய்வை செய்து வருவது அனைவரும் அறிந்ததே.
கடந்த 2016 இல் மனித மூளையை கணினியுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு Neuralink என்ற நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கியிருந்தார்.
இதில் மனித மூளையின் ஆற்றல்களைத் தெரிந்து கொண்டு, பல்வேறு நோய்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் கணினியுடன் மனித மூளையை இணைப்பது மூலமாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பல விடயங்களை கண்டறிய முடியும் எனவும் இந் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.
எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு
அதன்படி “நேற்று வெற்றிகரமாக மனித மூலையில் சிப் பொருத்தினோம். சிப் பொருத்தப்பட்ட நபர் படிப்படியாக குணமடைந்து வருகிறார்” என எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். முதல் சிப்புக்கு பெயர் டெலிபதி என்று அவர் வைத்துள்ளார்.
மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் மூலம் கணினிகளை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு இணைப்பையும் நியூராலிங்க் நிறுவனம் சிப்பை வடிவமைத்துள்ளது. கை, கால்கள் இழந்தவர்களுக்கு முதல் கட்டமாக இந்த சிப்களை பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த திட்டம் நல்ல பலன் தரும்பட்சத்தில் மருத்துவத்துறையில்,, குறிப்பாக நரம்பியல்துறையில் மிகப்பெரிய வெற்றியலிக்கும் என நம்பப்படுகின்றது.
இந்த வகை ஆராய்ச்சிக்காக மனிதரின் மண்டை ஓட்டில் துளையிட்டு சிப் பொருத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
The first human received an implant from @Neuralink yesterday and is recovering well.
— Elon Musk (@elonmusk) January 29, 2024
Initial results show promising neuron spike detection.
5BWM77
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |