தோனியிடம் அன்பு பரிசு வாங்கிய பிரபல நடிகர்! என்னவாக இருக்கும்?
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை கலைஞராக இருக்கும் யோகிபாபுவிற்கு கிரிக்கட் வீரர் தோனியிடம் இருந்து ஒரு பரிசு வந்துள்ளதாக தகவலொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் கலைஞர்களில் தற்போது முதல் இடத்தில் இருப்பவர் தான் நடிகர் யோகிபாபு.
இவர் அஜித், விஜய், ரஜினி என தமிழில் உள்ள அத்தனை சூப்பர் ஸ்டார் நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து யோகிபாபு “லொள்ளு சபா ” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் மீடியத்துறைக்குள் நுழைந்தார்.
இவரின் பல வருட போராட்டத்தின் வெற்றியாக இன்று வெள்ளத்திரையில் ஒரு நாயகனாக வெற்றி நடைபோட்டு வருகிறார்.
ஐபிஎல் 2023
இந்த நிலையில் ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த போட்டிகளை காண்பதற்காக பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்தவகையில் இந்த தடவை ஐபிஎல் 2023 போட்டியில் சிஎஸ்கே அணியினர் தான் வெற்றிகேடயத்தை வென்றார்கள்.
இதில் எம். எஸ். தோனி தான் தலைவராக இருந்து வருகிறார். ரசிகர்களின் பலத்த வரவேற்பு காரணமாக ஓய்வு பெறுவதாக கூறிய எம். எஸ். தோனி தற்போது இன்னொரு சீசன் விளையாட போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆட்டோகிராப் பேட்
இதனை தொடர்ந்து எம். எஸ். தோனியின் கையெழுத்துடன் இருக்கும் ஒரு பேட்டை யோகிபாபு அவர்கள் வாங்கியுள்ளார்.
இந்த காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் யோகிபாபுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
#MSDhoni Gifted A Signed Bat To #YogiBabu With " Best Wishes YogiBabu " in it?✨pic.twitter.com/PqaKZgf05V
— Saloon Kada Shanmugam (@saloon_kada) May 30, 2023