குழந்தைக்கு தமிழ் கடவுளின் பெயரை வைத்த யோகிபாபு! பெயர் என்ன தெரியுமா? மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பம்
தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான நடிகராக மாறி இருப்பவர் நடிகர் யோகி பாபு.
தொடக்கத்தில் பலரும் தன்னுடைய தோற்றத்தை கேலி செய்ததாக சில இடங்களில் குறிப்பிட்டிருக்கும் யோகி பாபு அதையே ப்ளஸ் ஆக மாற்றி ஜெயித்திருக்கிறார்.
இப்படியான வளர்ச்சிகள் ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம் புதிய வீடு, திருமணம் என தனிப்பட்ட யோகி பாபுவின் வாழ்க்கையிலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தான் யோகிபாபு தனக்கு அண்மையில் பிறந்த ஆண் குழந்தைக்கு, தன்னுடைய இல்லத்தில் பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக்கிறார்.
இந்த பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, புகைப்படங்கள் எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களில் யோகிபாபுவும் அவருடைய மனைவியும் இருப்பதை காண முடிகிறது. யோகிபாபுவின் ஆண் குழந்தை தொட்டிலில் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
மேலும், யோகிபாபுவின் குழந்தைக்கு தமிழ் கடவுள் முருகனின் பெயரில் ஒன்றான ‘விசாகன்’ என்று வைத்திருக்கிறார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர் விருமாண்டி, அந்த புகைப்படங்களை பகிர்ந்து, யோகிபாபுவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.